/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீயணைப்பு நிலையம் அமைக்க கோரிக்கை
/
தீயணைப்பு நிலையம் அமைக்க கோரிக்கை
ADDED : ஜன 14, 2026 06:44 AM
வால்பாறை: சோலையாறு அணை பகுதியில், புதிதாக தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என கலெக்டருக்கு எஸ்டேட் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை அடுத்துள்ள சோலையாறு அணை பகுதியை சுற்றிலும், பன்னிமேடு, ேஷக்கல்முடி, புதுக்காடு, கல்யாணப்பந்தல் ஆகிய எஸ்டேட்கள் உள்ளன. இது தவிர, உருளிக்கல் பெரியார் நகர், சேடல்டேம், சோலையாறு அணை இடது கரை உள்ளிட்ட பகுதிகளில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது: சோலையாறு அணையை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களின், வீடு மற்றும் கடைகளில் தீ விபத்து ஏற்பட்டால், 28 கி.மீ., தொலைவில் உள்ள வால்பாறை நகரில் இருந்து தான் தீயணைப்பு வாகனம் வர வேண்டும். இதனால், தீயை அணைக்க முடியாமல், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமாகின்றன. மேலும், தீயை அணைக்க முடியாமல் எஸ் டேட் தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
எனவே, இது போன்ற பிரச்னை மேலும் தொடராமல் இருக்க, சோலையாறு அணைப்பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

