தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சாய்பாபா காலனி மேம்பால பணி: விரைவுபடுத்த கோரிக்கை

சாய்பாபா காலனி மேம்பால பணி: விரைவுபடுத்த கோரிக்கை

சாய்பாபா காலனி மேம்பால பணி: விரைவுபடுத்த கோரிக்கை


UPDATED : ஜூன் 14, 2026 08:05 PM

ADDED : ஜூன் 14, 2026 07:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 14, 2026 08:05 PM ADDED : ஜூன் 14, 2026 07:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாய்பாபாகாலனியில், எம்.ஜி.ஆர்.,மார்கெட் முதல் பஸ் ஸ்டாண்ட் வரை 1,140 மீ., நீளத்துக்கு 4 வழி மேம்பாலம் கட்டும் பணி 2024ல் துவங்கியது. இதற்காக ரூ.52.90 கோடி ஒதுக்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்திருக்க வேண்டிய மேம்பால பணி பல்வேறு காரணங்களால் தாமதமாகி வருகிறது. பஸ் ஸ்டாண்ட் அருகே ரேம்ப் அமைக்கும் இறுதிகட்ட பணி நடந்து வருகிறது. வருகிற ஜூலை மாதத்துக்குள் பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேம்பால பணி காரணமாக தினமும் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

அப்பகுதியினர் கூறுகையில், 'மேம்பால பணிகள் திட்டமிட்ட காலத்தை கடந்து நடந்து வருகிறது. பணியை வேகப்படுத்த வேண்டும். வாகனங்கள் ஊர்ந்துதான் செல்கின்றன. அந்தப் பகுதியில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. அவை வாகன ஓட்டிகளை கடிக்கின்றன. மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்கிறது. அதிகாரிகள் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் 'என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us