தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை எஸ்.எம்.சி., மூலம் நிரப்ப கோரிக்கை

கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை எஸ்.எம்.சி., மூலம் நிரப்ப கோரிக்கை

கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை எஸ்.எம்.சி., மூலம் நிரப்ப கோரிக்கை


ADDED : ஆக 23, 2026 05:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2026 05:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: பள்ளிக்கல்வி இயக்குனர் ஜூன் 2ம் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதன்படி, 2025 ஆக., 1ம் தேதி நிலவரப்படி கூடுதல் ஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளிகளுக்கு, இயக்குனரின் பொதுத்தொகுப்பில் இருந்து 500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. இப்பணியிடங்கள், ஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு, நியமனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் அளவைப் பதிவேட்டிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆனால், அவற்றை ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பான (ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்.,)ல் பதிவேற்றம் செய்யும் பணிகளை, இயக்குனரக அளவில் மட்டுமே மேற்கொள்ள முடியும் என, முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், கூடுதல் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டும், அவற்றில் ஆசிரியர்களை நியமிக்க முடியாத நிலை நீடிக்கிறது.

தேசிய ஆசிரியர் சங்க மாநில தலைவர் திரிலோகசந்திரன் கூறுகையில், ‘‘கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்ட பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., பதிவேற்றப் பணிகள் முடியும் வரை காத்திருந்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். எனவே, அதுவரை பள்ளி மேலாண்மைக் குழு வாயிலாக கூடுதல் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க அனுமதித்து, பள்ளிக்கல்வித்துறை உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும்,’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us