/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்வித்துறைக்கு ஒதுக்கிய நிதியில் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரமாக்க வேண்டுகோள்
/
கல்வித்துறைக்கு ஒதுக்கிய நிதியில் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரமாக்க வேண்டுகோள்
கல்வித்துறைக்கு ஒதுக்கிய நிதியில் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரமாக்க வேண்டுகோள்
கல்வித்துறைக்கு ஒதுக்கிய நிதியில் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரமாக்க வேண்டுகோள்
ADDED : மார் 26, 2025 10:26 PM
கோவை:
'பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக்கிய ரூ.46 ஆயிரத்து, 767 கோடியில் இருந்து பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அறிக்கை:
பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக கடந்த, 2016 மற்றும் 2021 என, இரண்டு சட்டசபை தேர்தல்களிலும் தி.மு.க., வாக்குறுதி அளித்தது. அதன்படி, முதல்வரான ஸ்டாலின் பகுதிநேர ஆசிரியர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரியும், 3,700 உடற்கல்வி, 3,700 ஓவியம், 2,000 கணினி அறிவியல், 60 கட்டடக்கலை, 20 தோட்டக்கலை உட்பட, 12 ஆயிரம் பேரை சிறப்பாசிரியர்களாக பணியமர்த்த வேண்டும். 2012ம் ஆண்டு முதல், 13 ஆண்டுகளாக செய்கின்ற தற்காலிக வேலையை நிரந்தரப்படுத்த வேண்டும்.
மேலும், ரூ.12 ஆயிரத்து, 500 தொகுப்பூதியத்தை கைவிட்டு, காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். 'உங்கள் தொகுதி ஸ்டாலின்' என்ற 'விடியல் தர போறாரு ஸ்டாலின்' நிகழ்ச்சியில் தருமபுரி, கன்னியாகுமரி, மயிலாடுதுறையில் பகுதிநேர ஆசிரியர்களிடம், முதல்வர் கலந்துரையாடினார்.
அப்போது அளித்த, பணி நிரந்தர வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை. 10 ஆண்டுக்கு மேல் பணி புரிந்தால் நிரந்தரம் எனவும் தி.மு.க., தேர்தலில் வாக்குறுதி கொடுத்தது. இதுபோன்று பணி நிரந்தரம் நம்பிக்கை கொடுத்த முதல்வர், இந்த பட்ஜெட்டிலேயே வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
இந்த, 12 ஆயிரம் ஆசிரியர்களின் குடும்பத்தினர் மிகவும் வேதனையில் தள்ளப்பட்டுள்னர். எனவே, பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக்கிய, ரூ.46 ஆயிரத்து, 767 கோடியில் இருந்து, பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
'உங்கள் தொகுதி ஸ்டாலின்' என்ற 'விடியல் தர போறாரு ஸ்டாலின்' நிகழ்ச்சியில் தருமபுரி, கன்னியாகுமரி, மயிலாடுதுறையில் பகுதிநேர ஆசிரியர்களிடம், முதல்வர் கலந்துரையாடினார்.
அப்போது அளித்த, பணி நிரந்தர வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை. 10 ஆண்டுக்கு மேல் பணி புரிந்தால் நிரந்தரம் எனவும் தி.மு.க., தேர்தலில் வாக்குறுதி கொடுத்தது.