தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ டெட் தேர்வு வரை கணக்கெடுப்பு பயிற்சியை ஒத்திவைக்க கோரிக்கை

 டெட் தேர்வு வரை கணக்கெடுப்பு பயிற்சியை ஒத்திவைக்க கோரிக்கை

 டெட் தேர்வு வரை கணக்கெடுப்பு பயிற்சியை ஒத்திவைக்க கோரிக்கை


ADDED : ஜூலை 01, 2026 02:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2026 02:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: தமிழகத்தில் விரைவில் துவங்கப்படவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்காக, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களும் இப்பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்க வேண்டியுள்ளதால் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்து விலக்கு அளிக்க கோரியிருந்தனர். இந்நிலையில், 'டெட்' தேர்வு முடியும் வரை மக்கள்தொகை கணக்கெடுப்பு பயிற்சியை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தி தொடர்பாளர் அருளானந்தம் கூறுகையில், ''சிறப்பு டெட் தேர்வு வரும் 4, 5 ஆகிய தேதிகளில் நடக்கிறது. பள்ளி பணிகளுக்கு இடையில், நேரம் ஒதுக்கி படித்து வரும் நிலையில், பயிற்சி வகுப்புகளால் தேர்வுக்கான தயாரிப்பு பாதிக்கப்படும். ஆசிரியர்கள் தேர்வுக்கு தீவிரமாக தயாராகி வருவதால், மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்கான பயிற்சி வகுப்புகளை ஒத்திவைக்க வேண்டும்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us