/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஞ்சமி நிலம் மீட்டு வழங்க கோரிக்கை
/
பஞ்சமி நிலம் மீட்டு வழங்க கோரிக்கை
ADDED : ஜூன் 17, 2025 09:39 PM
அன்னுார்; 'பஞ்சமி நிலங்களை மீட்டு விவசாய தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்,' என கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அன்னுார் தாலுகாவில், 28 ஊராட்சிகளில், 2,000க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பங்கள் சொந்த இடம் மற்றும் வீடு இல்லாமல் உள்ளனர்.
இதைத் தொடர்ந்து, சமூக நீதி கட்சி சார்பில், அதன் பொதுச்செயலாளர் நாகராஜன் தலைமையில், நிர்வாகிகள், கோவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில்,' கோவை மாவட்டத்தில் பல நூறு ஏக்கர் பஞ்சமி நிலங்கள் உள்ளன. இவற்றை மீட்டு, பட்டியலின விவசாய தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்.
சொந்த இடமோ, வீடோ இல்லாமல் ஒரே வீட்டில் பல குடும்பங்கள் வசிக்கும் அவலம் உள்ளது. பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. பஞ்சமி நிலத்தை மீட்டு பட்டியலின தொழிலாளர்களுக்கு பிரித்து வழங்க வேண்டும்,' என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.