/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கான்பூர் - மதுரை ரயிலை மீண்டும் இயக்க கோரிக்கை
/
கான்பூர் - மதுரை ரயிலை மீண்டும் இயக்க கோரிக்கை
ADDED : ஜன 14, 2025 09:30 PM
கிணத்துக்கடவு:
கான்பூர் -- மதுரை ரயிலை மீண்டும் இயக்க வேண்டுமென, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கான்பூர் --- மதுரை ரயில் (01927) சேவை, கடந்த அக்., 2024 முதல் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வழித்தடத்தில் வாரம் ஒரு முறை இயக்கப்பட்டது. இந்த ரயில் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு என ஆறு மாநில வழித்தடத்தில் சென்று வந்தது.
இதனால், பயணியர் பலர் இந்த சேவையை பயன்படுத்தி வந்தனர். ஆனால், தற்போது தெலுங்கானா பகுதியில் உள்ள ஒரு ரயில்வே ஸ்டேஷனில் வளர்ச்சிப் பணிக்காக, இந்த சேவை தற்காலிகமாக ஒரு மாதமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அதிகளவு பயணியர் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும், கடந்த, 8ம் தேதி வரை இந்த சேவை நிறுத்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அதன்பின் இந்த ரயில் எப்போதிலிருந்து இயக்கப்படும் என எந்த அறிவிப்பும் இல்லாததால், ரயில் பயணியர் குழப்பம் அடைத்துள்ளனர்.
ரயில் பயணியர் கூறியதாவது:
ஆறு மாநிலங்களை இணைக்கும் படி, இந்த ரயில் வாரம் ஒருமுறை இயக்கப்பட்டது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகளில் அதிகளவு வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்கள் இந்த ரயில் சேவையை அதிக அளவு பயன்படுத்துகின்றனர்.
கடந்த ஒரு மாத காலமாக இந்த ரயில் சேவை இல்லாததால், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த ரயில் சேவை எப்போது துவங்கப்படும் என்று அறிவிப்பும் இல்லை. எனவே பயணியர் நலன் கருதி, விரைவில் இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.