/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னை நார் ஏற்றுமதி எளிதாக்க சரக்கு நிலையம் அமைக்க கோரிக்கை
/
தென்னை நார் ஏற்றுமதி எளிதாக்க சரக்கு நிலையம் அமைக்க கோரிக்கை
தென்னை நார் ஏற்றுமதி எளிதாக்க சரக்கு நிலையம் அமைக்க கோரிக்கை
தென்னை நார் ஏற்றுமதி எளிதாக்க சரக்கு நிலையம் அமைக்க கோரிக்கை
ADDED : அக் 19, 2025 10:15 PM
பொள்ளாாச்சி: 'பொள்ளாச்சியில், பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வர்த்தகம் ஈட்டி தரும் தென்னை நார் ஏற்றுமதியை எளிதாக்க, உள்நாட்டு சரக்கு நிலையம் அமைக்க வேண்டும்,' என, பாலக்காடு கோட்ட ரயில் பயனாளர்கள் உறுப்பினர் ஆனந்தகுமார் வலியுறுத்தினார்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. இதனால், 500க்கும் மேற்பட்ட தென்னை நார் மற்றும் சார்பு பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இங்கு இருந்து ஆண்டுக்கு தென்னை நார் மற்றும் சார்பு பொருட்கள், 2,000 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், ஏற்றுமதியை எளிதாக்க உள்நாட்டு சரக்கு நிலையம் அமைக்க வேண்டும் என பாலக்காடு கோட்ட ரயில் பயனாளர்கள் உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாலக்காடு கோட்ட ரயில் பயனாளர்கள் உறுப்பினர் ஆனந்தகுமார் கூறியதாவது: பொள்ளாச்சியில் இருந்து கொச்சின் அல்லது துாத்துக்குடி துறைமுகத்துக்கு கன்டெய்னர் லாரிகள் வாயிலாக, தென்னை நார் மற்றும் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதற்கு, 100 - 120 கன்டெய்னர் லாரிகள் தேவைப்படுகின்றன. இதனால், கூடுதல் செலவு, நேரம் விரயம் போன்றவை ஏற்படுகிறது.எனவே, இங்கு உள்நாட்டு சரக்கு நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம். இது குறித்து, பாலக்காடு கோட்ட ரயில்வே அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு சரக்கு நிலையம் அமைந்தால், வீண் செலவு கட்டுப்படுத்துவதுடன், ஏற்றுமதி எளிதாகும். அதிகளவு வருவாய் ஈட்டிக்கொடுக்கும் இடமாக பொள்ளாச்சி மாறிவிடும். இவ்வாறு, அவர் கூறினார்.