/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விடைத்தாள் தைக்கும் பணிக்கு தனி மையம் அமைக்க கோரிக்கை
/
விடைத்தாள் தைக்கும் பணிக்கு தனி மையம் அமைக்க கோரிக்கை
விடைத்தாள் தைக்கும் பணிக்கு தனி மையம் அமைக்க கோரிக்கை
விடைத்தாள் தைக்கும் பணிக்கு தனி மையம் அமைக்க கோரிக்கை
ADDED : ஜன 22, 2025 12:32 AM
கோவை; விடைத்தாள் தைக்கும் பணிக்கு கோவை, பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களில் தனி மையங்கள் அமைக்க, தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
கழகத்தின் வருவாய் மாவட்ட தலைவர் முகமது காஜா முகைதீன், அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 'பொதுத் தேர்வுக்கு விடைத்தாள்கள் தைக்கும் பணி, மாவட்டம் முழுவதும் ஒரே பள்ளியில் நடைபெறுவதால், உரிய வசதிகளின்றி ஆசிரியர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்கு ஒரு மையமும், கோவை கல்வி மாவட்டத்துக்கு குறைந்தது இரு மையங்கள் அமைக்கவும் கேட்டுக்கொள்கிறோம்.
விடைத்தாள்கள் தைக்கும் பணியில், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். பணி நடக்கும் மையங்களில் உரிய இருக்கை வசதி, பிற அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
பிளஸ்1 வகுப்பு விடைத்தாள் மற்றும் முகப்பு தாள் இணைக்கும் பணியை, கல்வி மாவட்டத்திற்கு மையங்களை நிறுவி, மேற்கொள்ள வேண்டும்' என தெரிவித்துள்ளார்.