/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டிப்பர் லாரிகளில் 'ஓவர் லோடு' நடவடிக்கை எடுக்க கோரிக்கை
/
டிப்பர் லாரிகளில் 'ஓவர் லோடு' நடவடிக்கை எடுக்க கோரிக்கை
டிப்பர் லாரிகளில் 'ஓவர் லோடு' நடவடிக்கை எடுக்க கோரிக்கை
டிப்பர் லாரிகளில் 'ஓவர் லோடு' நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ADDED : செப் 05, 2025 09:47 PM
கிணத்துக்கடவு, ;கிணத்துக்கடவு, நெ.10.முத்தூரில் செயல்படும் கல்குவாரிகளில் டிப்பர் லாரியில் அதிக லோடு ஏற்றி செல்வதால் ரோடு சேதமடைவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் செயல்படுகின்றன. பல குவாரிகளில் விதிமீறல் தொடர்கிறது. இதில், நெ.10.முத்தூரில் செயல்படும் கல்குவாரிகளில் இருந்து, டிப்பர் லாரிகளில் கற்கள் ஓவர் லோடு எடுத்து செல்வதை தடுக்க வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த விவசாயி முருகானந்தம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
மனுவில் கூறியிருப்பதாவது:
நெ.10.முத்தூர் கிராமப்புற ரோடுகளில், 30 முதல் 80 டன் வரை கற்கள் லோடு ஏற்றி செல்வதால், தார் ரோடு சேதமடைகிறது. இதில், சங்கராயபுரம், நெ.10.முத்தூர், பகவதிபாளையம், முத்துக்கவுண்டனூர், கோவிந்தபுரம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் ரோடு சேதமடைந்துள்ளது.
இதனால், விவசாயிகள் விளைபொருட்கள் எடுத்து செல்வதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை மனு கொடுத்தும், இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, கனிமங்கள் கொண்டு செல்லும் கிராமப்புற ரோடுகளில் அதிகபட்சமாக, 10 டன் கனிவள கற்கள் கொண்டு செல்ல, அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். விதிமீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.