sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 துாய்மை பணியாளருக்கு காலை உணவு தரமாக தயாரித்து வழங்க வேண்டுகோள்

/

 துாய்மை பணியாளருக்கு காலை உணவு தரமாக தயாரித்து வழங்க வேண்டுகோள்

 துாய்மை பணியாளருக்கு காலை உணவு தரமாக தயாரித்து வழங்க வேண்டுகோள்

 துாய்மை பணியாளருக்கு காலை உணவு தரமாக தயாரித்து வழங்க வேண்டுகோள்


ADDED : பிப் 10, 2026 05:30 AM

Google News

ADDED : பிப் 10, 2026 05:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை, காளப்பட்டி ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில், கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், மேயர் ரங்கநாயகி, துணை மேயர் வெற்றிச் செல்வன் உள்ளிட்டோர் துாய்மை பணியாளர்களுக்கு உணவு பரிமாறினர்.

துவக்க நிகழ்ச்சி என்பதற்காக நேற்று ஒரு நாள் மட்டும் இட்லி, பொங்கல், வடை, மைசூர்பா வழங்கப்பட்டது.

தொழிலாளர்கள் சிலர் கூறியதாவது:

கண்ணம்மாள், பெரிய கடை வீதி: காலையில் உணவு வழங்குவது நல்லதுதான். டிபன் பாக்ஸில் நிரப்பித்தரும் உணவை 12 மணிக்கு மேல் சாப்பிடுவோம். காலையில் சாப்பிடாமல் பணிக்கு வந்து விடுவோம். இடைப்பட்ட நேரத்தில் பசிக்கும்போது உட்கொள்வோம்.

மாசிலாமணி, போத்தனுார்: வழக்கமாக காலையில் சாப்பிட மாட்டோம். வார்டுக்குள் வேலை பார்த்து விட்டு டீ, வடை சாப்பிடுவோம். மதியம் வீட்டுக்கு வந்து சாப்பிடுவோம். இப்போது வீட்டுக்கு திரும்ப 2.3 0 மணியாகி விடுகிறது.

காலை உணவு பயனுள்ளதாக இருக்கிறது. வார்டு ஆபீசுக்கு கையெழுத்து போட வந்ததும் உணவு தருகின்றனர். 12 - 12.30 மணிக்குள் சாப்பிடுவோம். துவக்கத்தில் இரு நாட்கள் உணவு நன்றாக இருந்தது; போக போக தரமில்லாமல் போனது.

துளசிமணி, ஈஸ்வரன் நகர்: காலையில் உணவு வழங்குவதே சரியாக இருக்கும். ஆரம்பத்தில் கொடுத்தபோது, தரமாக இருந்தது. இப்போது நன்றாக இல்லை. ரவா உப்புமா கட்டி கட்டியாக இருந்தது. பலரும் குப்பையில் வீசி விட்டனர். நல்ல திட்டம்; தொழிலாளர்களை சென்றடைய வேண்டும். பசி போக்கும் உணவை தரமானதாக வழங்க வேண்டும்.






      Dinamalar
      Follow us