/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மீடியனில் தேவையான இடைவெளி: நெடுஞ்சாலைத்துறையிடம் மனு
/
மீடியனில் தேவையான இடைவெளி: நெடுஞ்சாலைத்துறையிடம் மனு
மீடியனில் தேவையான இடைவெளி: நெடுஞ்சாலைத்துறையிடம் மனு
மீடியனில் தேவையான இடைவெளி: நெடுஞ்சாலைத்துறையிடம் மனு
ADDED : நவ 11, 2025 10:45 PM

அன்னுார்: அவிநாசியில் இருந்து, அன்னுார் வழியாக, மேட்டுப்பாளையத்திற்கு 238 கோடி ரூபாயில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் பா.ஜ., கோவை வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமையில், வக்கீல் அணி மாவட்ட தலைவர் சிவக்குமார் உள்ளிட்டோர், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சுகுமாரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது :
சாலை பணிகள் செய்யும் போது ஏற்படும் குழிகளை சரி செய்யாததால் விபத்து அபாயம் உள்ளது. மீடியனில் இடைவெளி விடுவது குறித்து அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுக்க கூடாது.
அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்து அதன் பிறகு மீடியனில் தேவையான இடங்களில் இடைவெளி விட வேண்டும். தற்போது நீண்ட தொலைவு சென்று திரும்பும் படி இடைவெளி அமைக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவி பொறியாளர் பதிலளிக்கையில், ''விரைவில் அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்கப்படும். அதன் பிறகு தேவைப்படும் இடத்தில் இடைவெளி விடப்படும்,'' என்றார். இதில், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் தர்மலிங்கம், சமூக ஊடகப் பிரிவு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், ஒன்றிய பொருளாளர் அசோக் உள்பட பலர் பங்கேற்றனர்.

