/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிணற்றில் இறந்த நிலையில் கிடந்த தொழிலாளி மீட்பு
/
கிணற்றில் இறந்த நிலையில் கிடந்த தொழிலாளி மீட்பு
ADDED : பிப் 25, 2024 10:48 PM
நெகமம்;நெகமம், காட்டம்பட்டியைச்சேர்ந்தவர் மாரிமுத்து, 37, கூலித்தொழிலாளி. இவர் இரவு நேரத்தில் தனது நண்பர்களுடன், காட்டம்பட்டி பகுதியில் உள்ள பொது கிணற்றின் அருகே அமர்ந்து மது குடித்துள்ளார்.
அப்போது மாரிமுத்துவுக்கு போதை அதிகமானதால், உடன் இருந்த நண்பர்கள் அவரை அங்கேயே விட்டுச்சென்றனர்.
கிணற்றின் பக்கவாட்டில்அமர்ந்தவாறு இருந்த அவர், நிலை தடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இவரது மனைவி சபரீஸ்வரி மற்றும் உறவினர்கள் பல இடங்களில் அவரை தேடியும் கிடைக்கவில்லை.
இறுதியில் கிணற்றின் அருகே சென்று பார்த்தபோது, மாரிமுத்துவின் செப்பல், மொபைல்போன் ஆகியவை இருந்தது. பின்னர் சபரீஸ்வரி நெகமம் போலீசில் புகார் செய்தார்.
அங்கு சென்ற போலீசார், கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினர் உதவியுடன், மாரிமுத்துவின் சடலத்தை மீட்டனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

