/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சொன்னபடி செயல்படாத மாநகராட்சி நிர்வாகம் வெள்ளலுார் பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு
/
சொன்னபடி செயல்படாத மாநகராட்சி நிர்வாகம் வெள்ளலுார் பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு
சொன்னபடி செயல்படாத மாநகராட்சி நிர்வாகம் வெள்ளலுார் பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு
சொன்னபடி செயல்படாத மாநகராட்சி நிர்வாகம் வெள்ளலுார் பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு
ADDED : மே 04, 2025 11:00 PM

கோவை, ;வெள்ளலுார் குப்பை கிடங்கில், 'இனி கோழிக் கழிவுகளை புதைக்கமாட்டோம்' என உறுதியளித்த மாநகராட்சி நிர்வாகம், விதிமீறி வருவதாக அப்பகுதி மக்கள் கொந்தளிக்கின்றனர்.
கோவை மாநகராட்சியின், 100 வார்டுகளிலும் தினமும், 1,250 டன் வரையிலான குப்பை சேகரமாகிறது. இக்குப்பையானது கடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெள்ளலுார் குப்பை கிடங்கில், மலை போல் குவிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் அனுபவிக்கும் பிரச்னைகள் கொஞ்ச நஞ்சமல்ல.
பனி காலத்தில் துர்நாற்றம், வெயில் காலத்தில் தீவிபத்து, ஈ தொல்லை என மாறி, மாறி வாட்டி வதைத்துவருகிறது.
பிரச்னை தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் வரை சென்று விசாரணையும் நடக்கிறது. அந்தந்த மண்டலங்களிலேயே, குப்பை மேலாண்மை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.
தற்போது, இறைச்சி கழிவுகளும் இம்சையை கூட்டியுள்ளது. மாநகரில் சேகரமாகும் இறைச்சிக் கழிவுகளை குப்பை கிடங்கு வளாகத்தில் குழி தோண்டி புதைப்பதால், நிலத்தடி நீர் பாதிக்கக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள் குமுறுகின்றனர்.
இதுதொடர்பாக, குறிச்சி-வெள்ளலுார் மாசு தடுப்பு கூட்டுக்குழுவினர், 'மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியின்றி, இறைச்சி கழிவுகளை ஏற்றி செல்லும் தனியார் நிறுவன வாகனங்களுக்கு தடை விதிப்பதோடு, சுகாதாரமற்ற வகையில் ரத்தக்கறை படிந்த கோழி கழிவுகளை தேக்கி வைக்கும் மாநகராட்சி மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் முறையிட்டுள்ளனர்.
குறிப்பாக, இறைச்சி கழிவுகளை அந்தந்த இடத்திலேயே மேலாண்மை செய்ய மாநகராட்சிக்கு உத்தரவிடவும் மனு அளித்துள்ளனர்.