/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'உங்களுடன் ஸ்டாலின்' மனுக்களை வருவாய்த்துறையினர் புறக்கணிப்பு
/
'உங்களுடன் ஸ்டாலின்' மனுக்களை வருவாய்த்துறையினர் புறக்கணிப்பு
'உங்களுடன் ஸ்டாலின்' மனுக்களை வருவாய்த்துறையினர் புறக்கணிப்பு
'உங்களுடன் ஸ்டாலின்' மனுக்களை வருவாய்த்துறையினர் புறக்கணிப்பு
ADDED : செப் 30, 2025 10:59 PM
அன்னுார்; வருவாய்த்துறை ஊழியர்களின் ஐந்து சங்கங்கள் இணைந்த கூட்டமைப்பு, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பெறப்பட்ட மனுக்களை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
அன்னுார் தாலுகா அலுவலகத்திலும், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களிலும், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், கவனத்தை ஈர்க்கும் வகையிலும், கறுப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்தனர்.
இச்சங்க மாநில துணை பொது செயலாளர் செந்தில்குமார் கூறுகையில், ''உங்களுடன் ஸ்டாலின் முகாம்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். உரிய அவகாசம் வழங்க வேண்டும். ஊழியர் கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். நிதி ஒதுக்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமை புறக்கணித்து வருகிறோம். முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கையை, 22 முதல் புறக்கணித்து வருகிறோம்,'' என்றார்.
ஐந்து சங்கங்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அன்னுார் தாலுகாவில் மகளிர் உரிமை தொகை மனுக்கள் உட்பட, பல ஆயிரம் மனுக்கள் உரிய விசாரணை இன்றி முடங்கி உள்ளன.