/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வருவாய் மாவட்ட விளையாட்டு ஆசிரியர்களை விடுவிக்க உத்தரவு
/
வருவாய் மாவட்ட விளையாட்டு ஆசிரியர்களை விடுவிக்க உத்தரவு
வருவாய் மாவட்ட விளையாட்டு ஆசிரியர்களை விடுவிக்க உத்தரவு
வருவாய் மாவட்ட விளையாட்டு ஆசிரியர்களை விடுவிக்க உத்தரவு
ADDED : அக் 18, 2025 11:40 PM
கோவை: கோவை வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி பல்வேறு பள்ளி, கல்லுாரி மைதானங்களில் நடந்துவருகிறது. கால்பந்து, வளைகோல்பந்து போட்டிகள் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரியில் நடக்க உள்ளது.
அதன்படி, வரும் 22ம் தேதி, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவியருக்கும், வரும், 23ம் தேதி, 14 வயதுக்குட்பட்ட மாணவியருக்கும், 24ம் தேதி, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கும், 25ம் தேதி, 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கும் நடக்கிறது.
அரசூர் கே.பி.ஆர்., தொழில்நுட்பக் கல்லுாரியில், இதே தேதிகளில் இதர குழு விளையாட்டுக்களும் நடக்கின்றன. இறகுப்பந்து போட்டிக்கான தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.
இப்போட்டிகளுக்கு நடுவர்களாக நியமிக்கப்பட்டுள்ள உடற்கல்வி ஆசிரியர்களை, உரிய தேதிகளில் விடுவிக்குமாறு, அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் கடிதம் அனுப்பியுள்ளார்.