/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வருவாய்த்துறை ஊழியர்கள் வெளிநடப்பு போராட்டம்
/
வருவாய்த்துறை ஊழியர்கள் வெளிநடப்பு போராட்டம்
ADDED : பிப் 18, 2025 10:08 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு தாலுகா அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் வெளிநடப்பு போராட்டம் நடந்தது.
வருவாய்த்துறை ஊழியர்களுக்கு அதிக பணி சுமை காரணமாக, தமிழகம் முழுவதும் நேற்று (18ம் தேதி) மாலை பணி நேரத்தில், ஒரு மணி முன்னதாக வெளிநடப்பு செய்ய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து, கிணத்துக்கடவு தாலுகா அலுவலக வளாகத்தில், ஒரு மணி நேரம் வெளிநடப்பு போராட்டம் மாவட்டத் தலைவர் ரமேஷ் தலைமையில் நடந்தது. இதில், ஏழு ஊழியர்கள் பங்கேற்றனர்.
இதில், வருவாய் துறை ஊழியர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.