sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா... மித்ரா ( கோவை)

/

 மோசடியை அம்பலமாக்கிய 'டியூகாஸ்' அதிகாரிக்கு 'பரிசு'

/

 மோசடியை அம்பலமாக்கிய 'டியூகாஸ்' அதிகாரிக்கு 'பரிசு'

 மோசடியை அம்பலமாக்கிய 'டியூகாஸ்' அதிகாரிக்கு 'பரிசு'

 மோசடியை அம்பலமாக்கிய 'டியூகாஸ்' அதிகாரிக்கு 'பரிசு'


ADDED : நவ 18, 2025 04:27 AM

Google News

ADDED : நவ 18, 2025 04:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப ணி நிமித்தமாக, கணபதி சென்றிருந்த சித்ராவும், மித்ராவும், அப்பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு சென்று சாம்பார் இட்லி ஆர்டர் கொடுத்தனர்.

சற்று நேரத்தில் டேபிளுக்கு வந்த சாம்பார் இட்லியை ருசிக்க ஆரம்பித்த மித்ரா, ''என்னக்கா, நம்மூருக்கு தொடர்ச்சியா வி.ஐ.பி.,கள் வந்துட்டே இருக்காங்களே. துணை ஜனாதிபதி வந்தாரு; பைனான்ஸ் மினிஸ்டர் வந்தாங்க. அடுத்ததா, பிரதமரும், முதல்வரும் வரப் போறாங்களாமே... '' என, ஆரம்பித்தாள்.

''ஆமாப்பா... பிசினஸ் சென்டரா இருக்கறதுனால, கொங்கு மண்டலம் முக்கிய இடமா மாறிடுச்சு. பைனான்ஸ் மினிஸ்டர் கலந்துக்கிட்ட மீட்டிங்ல, ஆயிரக்கணக்கான வியாபாரிகள் கலந்துக்கிட்டாங்க. சிலர், தொழில் ரீதியான கோரிக்கைகளை வெளிப்படையா முன்வச்சாங்க. மினிஸ்டரின் நேரடி கவனத்துக்கு கொண்டு போனதுனால, எப்படியும் கோரிக்கை நிறைவேறிடும்னு வியாபாரிகளுக்கு நம்பிக்கை வந்துருக்கு. அசோசியேசன் நிர்வாகி ஒருத்தரு, உணர்ச்சி பொங்க, 'நம்ம ஸ்டேட்டுக்கு நீங்க சி.எம்., ஆகணும்'னு பேசுனாரு; பார்வையாளர்கள் பலரும் கைதட்டி வரவேத்தாங்க,''

விவசாயிகள் ஆர்வம் ''பிரைம் மினிஸ்டர் மோடியின் வருகையை, விவசாயிகள் ஆர்வமா எதிர்பார்த்துட்டு இருக்காங்களாமே...''

''ஆமா, மித்து! விவசாயிகள் பிரச்னைக்கு கொள்கை ரீதியா சென்ட்ரல் கவர்மென்ட் தரப்புல முடிவெடுக்க வேண்டியிருக்கு.

தென்னிந்திய அளவுல நடக்குற மாநாட்டுல பிரைம் மினிஸ்டர் கலந்துக்கிறதுனால, சென்ட்ரல் கவர்மென்ட் மேல விவசாயிகளுக்கு பிடிப்பு ஏற்பட்டிருக்கு. புட்டபர்த்தியில இருந்து நம்மூருக்கு வர்ற பி.எம்., பங்சன்ல ஒன்றரை மணி நேரம் கலந்துக்கிறாரு. முக்கியமான அறிவிப்பு வெளியிடலாம்னு நெனைக்கிறாங்க,''

சி.எம். பங்சன் பின்னணி ''ஓ.... இதனாலதான், சி.எம்., பங்சனும் ஏற்பாடு செய்றாங்களா...'' என, நோண்டினாள் மித்ரா.

''ஆமா, மித்து! ஆரம்பத்துல சி.எம்.,க்கு ஈரோடு பங்சன் பிளான் பண்ணியிருந்தாங்க. சென்ட்ரல் கவர்மென்ட் மூவ் எல்லாத்தையும், ஸ்டேட் கவர்மென்ட் சைடுல உன்னிப்பா கவனிக்கிறாங்க. சென்ட்ரல் கவர்மென்ட் பார்வை நம்மூர் பக்கம் இருக்கறதை தெரிஞ்சுக்கிட்டதும், ஏதாச்சும் பங்சன் ஏற்பாடு செய்யச் சொல்லி, வாய்மொழி உத்தரவு வந்திருக்கு,''

''எம்.எஸ்.எம்.இ., டிபார்ட்மென்ட் பங்சன் நடத்த டிஸ்கஸ் பண்ணுனாங்க. பப்ளிக் சைடுல கவனத்தை ஈர்க்குற அளவுக்கு இருக்கணும்னு, செம்மொழி பூங்காவை திறக்கலாம்னு பேசியிருக்காங்க. கான்ட்ராக்டர் சைடுலயும், கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் சைடுலயும் இன்னும் 'ஒர்க்' முழுசா முடியலை; ஒரு மாசம் டைம் கொடுங்கன்னு கேட்டிருக்காங்க. அதையெல்லாம் காது கொடுத்து கேட்கற நிலைமையில ஆட்சியாளர்கள் இல்ல.

''சோறு தண்ணீ இல்லாம ஆபீசர்ஸ் பலரும் செம்மொழி பூங்கா வளாகத்துல 'கேம்ப்' அடிச்சு, வேலை பார்த்துட்டு இருக்காங்க,''

''இதுல, இவ்ளோ அரசியல் இருக்குதான்னு...'' வாயைப் பிளந்த மித்ரா, சாம்பார் இட்லியை சாப்பிட்டு முடித்து விட்டு, காபி ஆர்டர் கொடுத்தாள்.

கெத்துக் காட்டிய 'மாஜி' ''ஆர்ப்பாட்டமா இருந்தாலும் சாதாரணமா இருக்கக் கூடாதுன்னு, 'மாஜி' மினிஸ்டர் கெத்துக் காட்டுனாராமே...''

''அதுவா... எஸ்.ஐ.ஆர்.,க்கு எதிர்ப்பு தெரிவிச்சு ஆளுங்கட்சி கூட்டணி கட்சி சார்புல ஆர்ப்பாட்டம் அறிவிச்சாங்க. கூட்டணி கட்சிகள் சைடுல போதுமான ஆட்களை கூட்டிட்டு வராம விட்டுட்டாங்கன்னா, 'பெயிலியர்' ஆகிடுமேன்னு யோசிச்சு, பஸ்களை ஏற்பாடு செஞ்சு, ஒவ்வொரு அசெம்ப்ளியில இருந்தும் ஆயிரக்கணக்குல ஆட்களை அழைச்சிட்டு வந்தாங்க. பணத்துக்கு ஆசைப்பட்டு வந்தவங்க திரும்பிப் போறதுக்கு ரொம்பவும் அவஸ்தைப்பட்டாங்க,''

''கட்அவுட் வச்சவரு வீட்டுக்குப் போயி, குழந்தைகளுக்கு பண முடிப்பு கொடுத்தாராமே...''

''ஆமா, மித்து! உண்மைதான்! கொடிசியாவுல நடந்த காதுகுத்து விழாவுக்கு பிரமாண்டமா செந்தில்பாலாஜிக்கு கட்அவுட் வச்சிருந்தாங்க. அதைக்கேள்விப்பட்டு, பங்சனுக்கு வர்றதை அவரு தவிர்த்திட்டாரு. கட்சியில முக்கிய நிர்வாகி இல்ல நிகழ்ச்சிங்கிறதுனால, கொஞ்ச நாள் கழிச்சு, அவரோட வீட்டுக்குப் போயி, குழந்தைகளை வாழ்த்திட்டு, பண முடிப்பு கொடுத்திருக்காரு,''

''அதெல்லாம் இருக்கட்டும், ரெண்டெழுத்து மினிஸ்டர் ஒருத்தரு, 'மாஜி'க்கு 'சப்போர்ட்' பண்ணி, கட்சி தலைமையில பேசி, வாங்கிக் கட்டிட்டாராமே...''

''அதுவா... கொஞ்ச நாளைக்கு முன்னாடி 'மாஜி'யின் கட்சிப் பதவி பறிபோச்சுல்ல... அவருக்கான முக்கியத்துவத்தை குறைச்சிடக் கூடாதுன்னு, ரெண்டெழுத்து மினிஸ்டர் ஒருத்தரு, கட்சி தலைமையில பேசியிருக்காரு.

அப்போ, 'உங்க டிபார்ட்மென்ட் வேலையை மட்டும் பாருங்க. கொங்கு மண்டலத்துக்கென நியமிச்சிருக்கற பொறுப்பாளர், கட்சி வேலையை பார்த்துக்குவாரு. அந்த ஊர்ல நடக்குற கட்சி விவகாரங்கள்ல, மூக்கை நுழைக்காதீங்க'ன்னு சொல்லிட்டதா, உடன்பிறப்புகள் பேசிக்கிறாங்க,''

ராட்டினத்துக்கு கட்டுப்பாடு ''சிங்காநல்லுார் அரவான் கோயில் திருவிழாவுக்கு, நன்கொடையை ஆளுங்கட்சி தரப்புல அள்ளிக் கொடுத்ததுனால, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆனந்தமாகிட்டாங்களாமே...'' என்றபடி, டேபிளுக்கு வந்த காபியை உறிஞ்ச ஆரம்பித்தாள் மித்ரா.

''ஆமாப்பா... வழக்கமா, 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பாங்களாம். இந்த தடவை ரெண்டு லட்சம் ரூபா கொடுத்ததும் மிரண்டு போயிட்டாங்க,''

''ராட்டினம் நடத்துறதுக்கு கட்டுப்பாடு விதிச்சதுனால வருத்தம்னு கேள்விப்பட்டேனே...''

''அரவான் திருவிழா ஒரு வாரம் அமர்க்களமா நடக்கும். ராட்டினம், பெட்டி துாரி, கேம்ஸ்ன்னு கொண்டாட்டமா இருக்கும். சிங்காநல்லுார் ஏரியாவே களைகட்டும். டில்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்துனால, பாதுகாப்பு காரணம் கூறி, கேம்ஸ் நடத்துறதுக்கு நேரக்கட்டுப்பாடு விதிச்சிருக்காங்க. அதனால, ஜனங்களுக்கு ஏமாற்றம்; பல லட்சம் முதலீடு போட்டவங்களுக்கும் இழப்பு ஏற் பட்டிருக்கு,'' என்றபடி, பில் தொகையை செலுத்தி விட்டு வெளியே வந்தாள் சித்ரா.

தட்டுக்காணிக்கையில் பங்கு ஹெல்மெட் அணிந்து கொண்டு, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்த சித்ரா, ''தட்டுக்காணிக்கையை குறிப்பிட்ட சிலர் அமுக்குறாங்களாமே... '' என, கேட்டாள்.

''அது, மதுக்கரையில மலை மேல இருக்கற கோயில்ல நடக்குது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டுல அந்த கோயில் இருக்கு.

ஒவ்வொரு மாசமும் பவுர்ணமி அன்னைக்கு கிரிவலம் நடக்கும்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவாங்க. தட்டுக்காணிக்கையா பல லட்சம் ரூபாய் வருதாம்.

அந்த தொகையை அங்க இருக்கற சிலர் 'பங்கு' பிரிச்சிக்கிறாங்களாம். கோயில் நலம் விரும்பிகள் சிலர், 'மாஜி'யின் சகோதரர் கவனத்துக்கு கொண்டு போயிருக்காங்க. அவரோ, 'இப்போதைக்கு எந்தப் பிரச்னையும் வேணாம்; எலக்சனுக்கு பின்னாடி பார்த்துக்கலாம்'னு சமாதானம் சொல்லியிருக்காரு,''

''அதெல்லாம் இருக்கட்டும். 'டியூகாஸில்' போலி நகை மோசடி நடந்த விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த ஆபீசரை துாக்கியடிச்சிட்டாங்களாமே...''

''ஆமா, மித்து! நானும் கேள்விப்பட்டேன். போலி நகையை அடமானம் வச்சு 3.5 கோடி ரூபாயை எடுத்திருக்காங்க.

இந்த விவகாரத்துல ரெண்டு பேர் 'அரெஸ்ட்' ஆகியிருக்காங்க. இந்த முறைகேடு 2023ல நடந்திருக்கு. போன வருஷம் பதவிக்கு வந்த ஆபீசர், நகைக்கடன் விபரங்களை ஆய்வு செய்ய ஆர்டர் போட்டாரு.

அதுல, முறைகேடு விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துச்சு. பேரவை மீட்டிங்கிலும் இதை பத்தி மெம்பர்ஸ் கேள்வி கேட்டதும், தேதி குறிப்பிடாம ஒத்திவச்சிட்டாங்க. இதெல்லாம் மேலிடத்துக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கு.

அதனால, சம்பந்தப்பட்ட ஆபீசரை, வேற ஊருக்கு 'டிரான்ஸ்பர்' பண்ணிட்டாங்கன்னு மெம்பர்ஸ் பேசிக்கிறாங்க. புதுசா வந்திருக்கிற ஆபீசர், மெம்பர்ஸ்ட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருக்காராம்,''

''அப்படியா...'' என கேட்ட மித்ரா, கலெக்டர் ஆபீசை நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள்.






      Dinamalar
      Follow us