/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தகவல் உரிமைச் சட்டத்தில் 30 நாட்களில் பதில் வழங்க வேண்டும்' : விழிப்புணர்வு முகாமில் அறிவுறுத்தல்
/
'தகவல் உரிமைச் சட்டத்தில் 30 நாட்களில் பதில் வழங்க வேண்டும்' : விழிப்புணர்வு முகாமில் அறிவுறுத்தல்
'தகவல் உரிமைச் சட்டத்தில் 30 நாட்களில் பதில் வழங்க வேண்டும்' : விழிப்புணர்வு முகாமில் அறிவுறுத்தல்
'தகவல் உரிமைச் சட்டத்தில் 30 நாட்களில் பதில் வழங்க வேண்டும்' : விழிப்புணர்வு முகாமில் அறிவுறுத்தல்
ADDED : ஆக 03, 2025 09:20 PM
பெ.நா.பாளையம்; 'தகவல் உரிமைச் சட்டத்தில் 30 நாட்களில் பதில் வழங்க வேண்டும்' என்று விழிப்புணர்வு முகாமில் அறிவுறுத்தப்பட்டது.
பெரியநாயக்கன்பாளையம் தேசிய மனித மேம்பாட்டு மையம் மற்றும் கோவை கேலக்ஸி ரோட்டரி சங்கம் ஆகியன இணைந்து இம்முகாமை நடத்தியது. முகாம் ஒருங்கிணைப்பாளர் சரசு வரவேற்றார்.
தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய முன்னாள் மேலாளர் ரவிச்சந்திரன் பங்கேற்று பேசுகையில், தகவல் பெறும் உரிமைச் சட்டம் கீழ் தகவல் பெற அனைத்து இந்திய குடிமக்களுக்கும் உரிமை உண்டு. குடிமக்களுக்கு துறை தொடர்பான பணிகளை ஆய்வு செய்யவும், பதிவேடுகளையும், கோப்புகளையும் ஆய்வு செய்ய உரிமை உண்டு. தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 ன் கீழ் கோரப்படும் தகவல்கள், 30 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும்.
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் கட்டண தொகை செலுத்த தேவையில்லை. அதற்கான சான்றை இணைத்து அனுப்ப வேண்டும். தகவல் கோரப்படுவதற்கான காரணம் தெரிவிக்க வேண்டியதில்லை. உயிர், வாழ்க்கை, சுதந்திரம் பற்றிய தகவல்கள், 48 மணி நேரத்தில் வழங்க வேண்டும். பொது தகவல் அலுவலர்கள் வழங்கிய தகவல்கள் திருப்திகரமாக இல்லை எனில், பதில் கிடைக்கப்பெற்ற, 30 நாட்களுக்குள் முதல் மேல்முறையீட்டு அலுவலருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு அலுவலர், 30 நாட்களுக்குள் தகவல் வழங்க வேண்டும். அதிகபட்சம், 45 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம். மேல் முறையீட்டு அலுவலர் தகவலும் திருப்திகரமாக இல்லை எனில், தமிழ்நாடு தகவல் ஆணையத்துக்கு இரண்டாம் மேல்முறையீடு செய்யலாம் என்றார்.
முகாமில் கலந்து கொண்டவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டன. மேலும், முகாமில் மனு எவ்வாறு தயாரிப்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. முகாமில், பயிற்சியாளர்கள், பொதுமக்கள் மற்றும் ரோட்டரி சமுதாய சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.