/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோடு மோசமாக உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம்
/
ரோடு மோசமாக உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம்
ADDED : ஆக 21, 2025 08:23 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி மரப்பேட்டை நுாலகத்தில் இருந்து, கந்தசாமி பூங்கா செல்லும் ரோடு மிக மோசமாக உள்ளதால், ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர்.
பொள்ளாச்சி நகராட்சியில் மொத்தம், 147.78 கி.மீ.,க்கு ரோடு உள்ளன. நகராட்சி எல்லைக்குள், 11.50 கி.மீ., நீளமுள்ள சாலைகள் நெடுஞ்சாலைத் துறையினராலும், 5 கி.மீ., நீளமுள்ள சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகள் வாயிலாகவும் பராமரிக்கப்படுகின்றன.
அதில், பொள்ளாச்சி மரப்பேட்டை நுாலகத்தில் இருந்து கந்தசாமி பூங்கா வழியாக ஊத்துக்காடு ரோட்டுக்கு செல்லும் ரோடு மிக மோசமாக உள்ளது.ரோடு திரும்பும் இடங்களில் உள்ள பெரிய குழிகளில் மண் கொட்டப்பட்டு சமப்படுத்தாததால், ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். ஓட்டுநர்கள் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்து ஏற்படுகிறது.
பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து ஜோதிநகர் செல்லும் ரோட்டில், குடிநீர் குழாய் சீரமைப்பு பணிக்காக தோண்டப்பட்ட குழி முறையாக சீரமைக்கப்படாமல் உள்ளதால் விபத்துகளுக்கு வழி வகுக்கிறது.
ரோட்டில் பள்ளங்கள் உள்ள பகுதியில், வாகனங்கள் ஒதுங்கி செல்லும் போது எதிரே வரும் வாகனங்கள் மீது மோத வாய்ப்புள்ளது. எனவே, அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை எழுந்துள்ளது.