/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எச்சரிக்கை பலகை இல்லாததால் விபத்து அபாயம்
/
எச்சரிக்கை பலகை இல்லாததால் விபத்து அபாயம்
ADDED : ஜூன் 17, 2025 09:27 PM

அன்னுார்; அன்னுாரில், அவிநாசி சாலையில், அரசு மேல்நிலைப் பள்ளியில், 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இதையடுத்து பள்ளியின் முன்புறம் 300 அடி தொலைவிற்கு சாலையின் மையத்தில் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தத் தடுப்பின் மேற்கு பகுதியில் ரிப்ளெக்டர், எச்சரிக்கை பலகை எதுவும் இல்லை. இதனால் அடிக்கடி விபத்து நடக்கிறது. இப்பகுதி மக்கள் கூறுகையில், 'இந்த சாலையில், அதிக அளவில் வாகனங்கள் செல்கின்றன. வேகமாக செல்லும் வாகனங்கள், மற்றொன்றை முந்தும்போது, திடீரென மையத் தடுப்பை இருளில் பார்க்கின்றனர்.
கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளாகின்றனர். இதை தடுக்க எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். மைய தடுப்பில் பெரிய அளவில் ஒளிரும் விளக்குகளுடன் ரிப்ளெக்டர் அமைக்க வேண்டும்' என்றனர்.