/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோடு சீரமைக்காததால் விபத்து அபாயம்
/
ரோடு சீரமைக்காததால் விபத்து அபாயம்
ADDED : ஏப் 01, 2025 10:19 PM

பொள்ளாச்சி,; பொள்ளாச்சி நகராட்சி அலுவலக ரோடு சீரமைக்காததால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட ராஜாமில் ரோடு, ஊத்துக்காடு ரோடுகள் பல இடங்களில் மோசமான நிலையில் உள்ளன. இதனால், வாகன ஓட்டுநர்கள் அவதிக்கு உள்ளாகின்றனர்.
இந்நிலையில், நகராட்சி அலுவலக ரோடு வாயிலாக தினமும், நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த ரோட்டின் நடுவே குழியாக உள்ளதால் விபத்துகள் ஏற்படுகிறது.
இந்நிலையில், இருசக்கர வாகனத்தில், பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த நபர், பள்ளத்தில் தடுமாறி கீழே விழும் நிலை ஏற்பட்டது. அங்கு இருந்தவர்கள், அவருக்கு உதவி செய்து மீட்டனர். இதுபோன்று சம்பவங்களை தடுக்க ரோட்டை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், 'பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக, ரோட்டின் நடுவே குழி தோண்டப்பட்டது. அதன்பின், தோண்டப்பட்ட ரோடு, சமமாக மூடாமல், மண்ணை கொட்டி மேடு பள்ளமாக விட்டு விட்டனர்.
இதனால், அவ்வப்போது வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றன. ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று, பல இடங்களில் பாதாள சாக்கடை திட்டத்தின் ஆள்இறங்கும் குழிகளும், அதன் மூடியும் சேதமடைந்துள்ளன. இதனால், வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகின்றன. அவற்றையும் சீரமைக்க வேண்டும்,' என்றனர்.