தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ துடியலூர் அருகே அடிப்படை வசதி கோரி சாலை மறியல்

துடியலூர் அருகே அடிப்படை வசதி கோரி சாலை மறியல்

துடியலூர் அருகே அடிப்படை வசதி கோரி சாலை மறியல்


UPDATED : ஜூன் 28, 2026 05:44 PM

ADDED : ஜூன் 28, 2026 05:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 28, 2026 05:44 PM ADDED : ஜூன் 28, 2026 05:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

துடியலூர்:துடியலூர் அருகே என்.ஜி.ஜி.ஓ., காலனியில் அடிப்படை வசதி கோரி, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

துடியலூர் அருகே அசோகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மந்திராலயா கார்டன் குடியிருப்பு பகுதியில், புதிய தார் சாலை அமைக்க, திட்டமிடப்பட்டு பணிகள் பாதியில் நிற்கிறது. குடிநீர் வினியோகமும் ஒழுங்காக நடப்பதில்லை. ரயில்வே பாலம் தடுப்பணை அருகே குவிக்கப்படும் குப்பைகளால், அப்பகுதியில் சுற்றுப்புற சூழல் பாதிக்கிறது.

இது தொடர்பாக அசோகபுரம் ஊராட்சி நிர்வாகம் முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் கோவை மாவட்ட நிர்வாகத்துக்கு பலமுறை மனுக்கள் கொடுத்தும், பிரச்சினைகள் சரி செய்யப்படவில்லை.

இதனால் வெறுப்படைந்த மந்திராலயா கார்டன் பொதுமக்கள், அசோகபுரம் ஊராட்சி நால் ரோட்டில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்தில் துடியலூர் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், பெரியநாயக்கன்பாளையம் மண்டல பி.டி.ஓ., பிரபு, அசோகபுரம் ஊராட்சி செயலாளர் லீலா கிருஷ்ணன் உள்ளிட்டோர் மறியல் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு நடத்தினர்.

தார் பற்றாக்குறையால் சாலை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போதுமான அளவு தார் கிடைத்தவுடன் பணிகள் மேற்கொள்ளப்படும். குடிநீர் வினியோகம் சீராக மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குப்பை பிரச்சனைக்கு மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us