/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சீரான குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியல்
/
சீரான குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியல்
ADDED : மார் 07, 2024 11:36 AM
மேட்டுப்பாளையம்:சீரான குடிநீர் வழங்கக் கோரி, காரமடை அருகே பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, மருதூர் ஊராட்சியில், 12 வார்டுகள் உள்ளன. பெரும்பாலான வார்டுகளுக்கு, ஐந்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது.
இந்த ஊராட்சிக்கு உட்பட்ட, 4, 5, 6 ஆகிய வார்டுகளில், திம்மம்பாளையம், ராம்நகர், என்.ஜி.புதூர், ஏ.டி. காலனி, கே.எஸ்.பி., கார்டன், ஏழு சுழி, மகாலட்சுமி நகர் ஆகிய பகுதிகள் உள்ளன.
இந்த பகுதிகளுக்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை. அதனால் நேற்று, 11:00 மணிக்கு, பொதுமக்கள் காலிக்குடத்துடன் திம்மபாளையத்தில் காரமடை தோலம்பாளையம் சாலையில் மறியல் செய்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு, காரமடை போலீசார் மற்றும் பி.டி.ஓ., மகேஸ்வரி ஆகியோர் வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாலைக்குள் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக உறுதி அளித்ததை அடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் காரமடை தோலம்பாளையம் சாலையில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

