/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலை விரிவாக்கம்; கட்டடங்களை மதிப்பிடும் பணி துவக்கம்
/
சாலை விரிவாக்கம்; கட்டடங்களை மதிப்பிடும் பணி துவக்கம்
சாலை விரிவாக்கம்; கட்டடங்களை மதிப்பிடும் பணி துவக்கம்
சாலை விரிவாக்கம்; கட்டடங்களை மதிப்பிடும் பணி துவக்கம்
ADDED : நவ 04, 2025 09:07 PM

அன்னுார்: சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்பட உள்ள கட்டடங்களை மதிப்பிடும் பணி அன்னுாரில் நடந்தது.
அவிநாசியில் இருந்து, கருவலூர், அன்னுார், பொகலூர் வழியாக மேட்டுப்பாளையம் வரை 38 கி.மீ., தூரத்திற்கு, 238 கோடி ரூபாயில் நான்கு வழி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சோமனுார் பிரிவு, அன்னுார் கடைவீதியில் அவிநாசி ரோடு -சத்தி ரோடு சந்திப்பு, பயணியர் மாளிகை முன்பு என மூன்று இடங்களில் சந்திப்புகளை அகலப்படுத்த நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது.
இதற்காக அப்பகுதியில் நிலமும் கட்டடங்களும் கையகப்படுத்தப்பட உள்ளது. அன்னுார் கடைவீதியில் அவிநாசி ரோடும் சத்தி ரோடும் சந்திக்கும் கார்னரில் அகற்றப்பட உள்ள கட்டடங்களை அளந்து மதிப்பீடு செய்யும் பணியில் தனியார் கன்சல்டிங் நிறுவனத்துடன் இணைந்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'கையகப்படுத்தப்படும் கட்டடங்களுக்கு மதிப்பீட்டுத் தொகையை விட இரண்டு மடங்கு தொகை இழப்பீடாக வழங்கப்படும். வழங்கப்பட உள்ள தொகை குறித்து முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்படும்,' என்றனர்.

