/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழைநீரால் கரைந்து போகும் ரோடு மழைநீரால் கரைந்து போகும் கரையாம்பாளையம் ரோடு

ADDED : டிச 05, 2025 07:07 AM

சூலுார்: கரையாம்பாளையம் -மயிலம்பட்டி ரோடு, மழை நீர் தேங்கி சேதமடைந்துள்ளதால், மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்டது மயிலம்பட்டி ஊராட்சி. இங்கு, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஏராளமான தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. அவிநாசி ரோட்டில் இருந்து கரையாம் பாளையம் மற்றும் மயிலம்பட்டி செல்லும் ரோட்டில், பல இடங்களில் மழை நீர் தேங்கி, குழிகள் ஏற்பட்டுள்ளன. இதனால், இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது:
கரையாம்பாளையம் - மயிலம்பட்டி ரோட்டில் பல இடங்களில் குழிகள் ஏற்பட்டுள்ளதால், வாகனங்களை ஓட்ட முடியவில்லை. காலை, 11:00 மணி, மாநகருக்குள் கன ரக வாகனங்கள் செல்ல தடை உள்ளது. அதனால், கனரக வாகனங்கள் இந்த ரோட்டில் அதிகளவில் இயக்கப்படுகின்றன. சமீபத்தில் பெய்த மழையால் பல இடங்களில் மழை நீர் தேங்கி குழிகள் ஏற்பட்டுள்ளன. வேகத்தடைகள் அருகே மழை நீர் தேங்குவதால் குழிகள் ஏற்பட்டுள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். நெடுஞ்சாலைத்துறையினர் ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.