/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நெடுந்தொடர் ஓட்டப் போட்டி
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நெடுந்தொடர் ஓட்டப் போட்டி
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நெடுந்தொடர் ஓட்டப் போட்டி
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நெடுந்தொடர் ஓட்டப் போட்டி
ADDED : டிச 25, 2025 05:19 AM

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள யு.ஐ.டி., கல்வி நிறுவனங்களின் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நெடுந்தொடர் ஓட்டப் போட்டிகள் நடந்தன.
பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள யுனைடெட் கல்வி குழுமம், கோவை ரோட்டரி எலைட் சங்கம், கே.ஆர். மருத்துவமனை ஆகியன இணைந்து, 'பிட் இந்தியா' மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நெடுந்தொடர் ஓட்டப்போட்டியை நடத்தியது. இதில், 6 கி.மீ., க்கான முதல் பிரிவு துவக்க விழா தாரகா மஹாலிலும், 5 கி.மீ., தூரத்திற்கான இரண்டாவது பிரிவினருக்கான துவக்க விழா, பெரியநாயக்கன்பாளையம் கே.ஆர். மருத்துவமனையிலும் தொடங்கியது.
பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி., பொன்னுசாமி கொடி அசைத்து, நெடுந்தொடர் ஓட்டத்தை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், கோவை ரோட்டரி எலைட் சங்கத்தின் தலைவர் கோபிநாத், யுனைடெட் கல்வி நிறுவனங்களின் தலைவர் சண்முகம், துணைத் தலைவர் மைதிலி, கே.ஆர். மருத்துவமனை இயக்குனர் டாக்டர் திலகம் ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனி பிரிவுகளாக போட்டிகள் நடந்தன.
முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக் கப் பரிசுகள், சான்றிதழ், பதக் கங்கள் வழங்கப்பட்டன.

