/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழைநீர் வடிகால் இல்லாமல் சாலையா; பொதுமக்கள் எதிர்ப்பு
/
மழைநீர் வடிகால் இல்லாமல் சாலையா; பொதுமக்கள் எதிர்ப்பு
மழைநீர் வடிகால் இல்லாமல் சாலையா; பொதுமக்கள் எதிர்ப்பு
மழைநீர் வடிகால் இல்லாமல் சாலையா; பொதுமக்கள் எதிர்ப்பு
ADDED : ஜூலை 18, 2025 09:45 PM
அன்னூர்; மழைநீர் வடிகால் இல்லாமல், சாலை அமைக்க பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
அவிநாசி முதல் மேட்டுப்பாளையம் வரை 38 கி.மீ., தொலைவுக்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி, ஆறு மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இதில் 58 அடி அகலத்தில் 238 கோடி ரூபாயில் சாலை அமைக்கப்படுகிறது. அன்னூரில், அவிநாசி சாலையில், நாகமாபுதூரில், கற்பக விநாயகா நகர் உள்ளது.
இப்பகுதி மக்கள் கூறுகையில்,' ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும், மழைநீர் வடிகால் இல்லாமல் கற்பக விநாயகர் நகரில், வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து விடுகிறது.
இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளோம்.
நான்கு வழிச்சாலை அமைக்கும் போது, மழைநீர் வடிகால் இல்லாமல் அமைக்க துவங்கி உள்ளனர்.
'இதனால் மழைநீரில் மீண்டும் வீடுகள் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும்' என்றனர்.