/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குமிட்டிபதி வரை சாலை பணி தீவிரம்
/
குமிட்டிபதி வரை சாலை பணி தீவிரம்
ADDED : டிச 01, 2024 10:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு ; கிணத்துக்கடவு, மூலக்கடை முதல் குமிட்டிபதி வரை சாலை மேம்பாட்டு பணி நடந்தது.
கிணத்துக்கடவு, சொக்கனூர் ரோட்டில், அங்காங்கே சிறு, சிறு விரிசல் ஏற்பட்டிருந்தது. மேலும், இந்த ரோடு பல்லடம் முதல் கொச்சின் வரை இணைப்பு ரோடாகவும் உள்ளது. இந்நிலையில், ரோட்டை சீரமைக்க திட்டமிடப்பட்டது. கிணத்துக்கடவு நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்திற்குட்பட்ட மூலக்கடை முதல், குமிட்டிபதி வரை, 5.6 கி.மீ., தூரத்துக்கு, ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் வாயிலாக, 2.4 கோடி மதிப்பீட்டில் சாலை ஓடுதளம் மேம்பாட்டு பணி நடக்கிறது.