/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்தலில் ஓட்டு அளிப்போம்: சாலைப்பணியாளர் உறுதியேற்பு
/
தேர்தலில் ஓட்டு அளிப்போம்: சாலைப்பணியாளர் உறுதியேற்பு
தேர்தலில் ஓட்டு அளிப்போம்: சாலைப்பணியாளர் உறுதியேற்பு
தேர்தலில் ஓட்டு அளிப்போம்: சாலைப்பணியாளர் உறுதியேற்பு
ADDED : மார் 03, 2024 08:39 PM
பொள்ளாச்சி;'ஓட்டு அளிப்போம்; ஜனநாயக கடமையை நிறைவேற்றுவோம்,' என, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் உறுதியேற்றனர்.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில், விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு இயக்கம், பொள்ளாச்சி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் நடந்தது.
கோட்ட இணைச் செயலாளர் இடும்பன் தலைமை வகித்தார். கோட்ட துணை தலைவர்கள் வெள்ளிங்கிரி, வீரமுத்து, கோட்ட இணைச் செயலாளர் ஜான்பாட்சா முன்னிலை வகித்தனர்.
கோட்ட செயலாளர் ஜெகநாதன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் சுப்ரமணியம், அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் வட்ட கிளை செயலாளர் சுப்ரமணியம் ஆகியோர் பேசினர். மாநில பொதுச் செயலாளர் அம்சராஜ் உறுதிமொழியேற்பு இயக்கம் குறித்து விளக்கினார். கோட்ட பொருளாளர் சின்னமாரிமுத்து நன்றி கூறினார்.
அதில், வரும், லோக்சபா தேர்தலில் ஓட்டுரிமையை பயன்படுத்த வேண்டும். ஓட்டுரிமை, ஜனநாயக உரிமையாகும்; ஓட்டுக்கு பணம், பொருள் பெற மாட்டோம். ஓட்டை விற்பது குற்றம் என்பதை அறிவோம்; ஜாதி, மதம் பாராமல் மக்களின் நலனை காத்திட ஓட்டு அளிப்போம்,' என உறுதியேற்றனர்.

