/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோரிக்கையை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் பேரணி
/
கோரிக்கையை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் பேரணி
ADDED : செப் 15, 2025 09:42 PM

பொள்ளாச்சி; 41 மாத கால பணி நீக்க காலத்தை சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும், என, சாலை பணியாளர்கள் வலியுறுத்தினர்.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்க மாநாடு, பொள்ளாச்சி வங்கி ஊழியர் சங்க கட்டடத்தில் நடந்தது. முன்னதாக, தெற்கு ஒன்றிய ஊராட்சி அலுவலகம் எதிரே இருந்து, பேரணி நடந்தது. மாவட்டச் செயலாளர் செந்தில்குமார், பேரணியைத் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, பணியாளர்கள் ஊர்வலமாக சென்று, நகராட்சி அலுவலக ரோட்டை அடைந்தனர். அப்போது, 41 மாத கால பணி நீக்க காலத்தை சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். சாலை பணியாளர்களில் இறந்தோரின் குடும்ப வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்.
மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை ரத்து செய்து, அரசே நெடுஞ்சாலைகளை பராமரித்து, கிராமப்புற இளைஞர்களை சாலை பணியாளர்களாக நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மாநாட்டில், கோட்டத் தலைவர் வெற்றிவேல், செயலாளர் ஜெகநாதன், பொருளாளர் சின்ன மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.