/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டோரத்தில் சிதறி கிடக்கும் தடுப்புகளால் விபத்து அபாயம்
/
ரோட்டோரத்தில் சிதறி கிடக்கும் தடுப்புகளால் விபத்து அபாயம்
ரோட்டோரத்தில் சிதறி கிடக்கும் தடுப்புகளால் விபத்து அபாயம்
ரோட்டோரத்தில் சிதறி கிடக்கும் தடுப்புகளால் விபத்து அபாயம்
ADDED : ஆக 28, 2025 10:51 PM

கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவு சுற்றுப்பகுதிகளில் ரோட்டில் வைக்கப்படும் தடுப்புகள் குப்பை போன்று ரோட்டோரம் கிடக்கிறது.
கிணத்துக்கடவு சுற்றுப்பகுதிகளில் முக்கிய இடங்கள் மற்றும் விபத்து நடக்கும் இடங்களில் அசம்பாவிதங்களை தவிர்க்க தடுப்புகள் வைக்கப்படுகிறது. இதில், கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் காய்கறி மார்க்கெட் முன், 'யு டேர்ன்' அருகே ரோட்டோரம் தடுப்புகள் பராமரிப்பின்றி சேதமடைந்து குப்பை போன்று கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மேலும், புது பஸ் ஸ்டாண்ட் முன் சேதமடைந்த தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. வேகமாக காற்று வீசினால் சரிந்து கீழே விழும் அபாயமும் உள்ளது.
கிணத்துக்கடவு - கொண்டம்பட்டி செல்லும் ரோட்டில் லட்சுமி நகர் அருகே வளைவு பகுதியில் விபத்தை தடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த இரு தடுப்புகள், தற்போது ரோட்டோரம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்த தடுப்புகளை வாகன ஓட்டுநர்கள் சிலர் தங்கள் வசதிக்காக நகர்த்தி வைத்துள்ளனர். தற்போது ரோட்டோரம் பயனற்று கிடக்கிறது. இதனால், ரோட்டில் விபத்து அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, கிணத்துக்கடவு போலீசார் விபத்து நடக்கும் முக்கிய இடங்களில் தடுப்புகளை மீண்டும் வைப்பதுடன், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.