/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொங்கல் விடுமுறையால் வெறிச்சோடிய ரோடுகள்
/
பொங்கல் விடுமுறையால் வெறிச்சோடிய ரோடுகள்
ADDED : ஜன 16, 2025 03:53 AM

கோவை : தொடர் விடுமுறையின் காரணமாக, கோவையின் பல்வேறு ரோடுகளும், மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடின.
கடந்த, 11ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களுக்கும் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு மேல், விடுமுறை கிடைத்ததால், பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
பொதுமக்கள் வீட்டில் ஓய்வு எடுத்ததால், நகரின் பிரதான ரோடுகள் வெறிச்சோடின. பெரும்பாலான ஓட்டல்கள், கடைகள் அடைக்கப்பட்டன. குறிப்பாக, கையேந்தி பவன்கள் அடைக்கப்பட்டன.
இதன் காரணமாக, இங்கு தங்கியுள்ள வெளியூர் பேச்சுலர்களின் பாடு திண்டாட்டமானது. உணவு கிடைக்காமல் பலரும் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டது.