/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கூரைத்தோட்டம்' விழிப்புணர்வு; 2 நாள் கண்காட்சி நடத்த முடிவு
/
'கூரைத்தோட்டம்' விழிப்புணர்வு; 2 நாள் கண்காட்சி நடத்த முடிவு
'கூரைத்தோட்டம்' விழிப்புணர்வு; 2 நாள் கண்காட்சி நடத்த முடிவு
'கூரைத்தோட்டம்' விழிப்புணர்வு; 2 நாள் கண்காட்சி நடத்த முடிவு
ADDED : செப் 16, 2025 11:12 PM
கோவை; கோவையில் பசுமை பரப்பை அதிகரிக்கும் நோக்கில், பொதுமக்களிடம் கூரைத்தோட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, இரு நாட்கள் கண்காட்சி நடத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
மாநகராட்சி நிர்வாகமானது, பசுமை பரப்பை அதிகரிக்கும் விதமாக குளக்கரை, நீர் வழித்தடங்களை ஒட்டிய பகுதிகளில், மரக்கன்று நட்டு வருகிறது.
இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள், மாநகராட்சி பகுதிகளில் நடவு செய்யப்பட்டுள்ளன. வெள்ளலுார் குப்பை கிடங்கில், 45 ஏக்கரில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படுகின்றன.
அடுத்த கட்டமாக, கட்டடங்களில் கூரை தோட்டம் அமைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, இரு நாள் கண்காட்சி நடத்த, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறியதாவது:
மாநகராட்சி பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரிக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கூரைத்தோட்டங்கள் அமைப்பதன் வாயிலாக, வெப்பம் உமிழ்வு கட்டுப்படுத்தப்படும்.
வீடுகள் உள்ளிட்ட கட்டடங்களில் கூரைத்தோட்டம் அமைக்கும் முறை, அவை அமைப்பதற்கு ஆகும் செலவு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் கண்காட்சி நடத்த உள்ளோம்.
வீடுகளில் கழிவு மேலாண்மை செய்வது குறித்தும், அதற்கான தொழில்நுட்பங்கள், நவீன உபகரணங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். கூரைத்தோட்டம் வாயிலாக பசுமையான சூழலை உருவாக்க முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.