/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டரி சார்பில் கல்வி சார் விருது வழங்கல்
/
ரோட்டரி சார்பில் கல்வி சார் விருது வழங்கல்
ADDED : செப் 21, 2025 11:10 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் நஞ்சையா லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, காரமடை ரோட்டரி சங்கம் மற்றும் கன்னார்பாளையம் ஸ்ரீ ராஜலட்சுமி சாமப்பா அறக்கட்டளை இணைந்து கல்வி சார் விருது வழங்கும் விழா, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு, தமிழ்நாடு கல்வி காப்பு அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் ஞானசேகரன் தலைமை வகித்தார்.
கோவை ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் தனசேகர், ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் என்.எல்.பி கல்லூரியின் முன்னாள் கல்வி மேலாண்மை குழு உறுப்பினர் தேவேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
விழாவில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற வெள்ளியங்காடு அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சாக்ரடீஸ் குலசேகரன், புன்செய் புளியம்பட்டி கே.ஓ.எம். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உமா கௌரி, மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வணிகவியல் முதுகலை ஆசிரியர் ஆனந்தகுமார், தம்பு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் விவேகானந்தன், மூலத்துறை நடுநிலை பள்ளி கணிதாசிரியர் திருமுருகன், பெட்டதாபுரம் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் மதியழகன் மற்றும் அரசு பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி பெற உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு மற்றும் விருது வழங்கப்பட்டது.
விழாவில் கல்லூரி செயலாளர் சத்தியமூர்த்தி, முன்னிலை வகித்தார், முதல்வர் கவுசல்யா, காரமடை ரோட்டரி சங்க தலைவர் குமணன் நடராஜன், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.--