/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எல் அண்டு டி பைபாஸில் வாகனம் தேங்குவதை தவிர்க்க 'ரவுண்டானா'
/
எல் அண்டு டி பைபாஸில் வாகனம் தேங்குவதை தவிர்க்க 'ரவுண்டானா'
எல் அண்டு டி பைபாஸில் வாகனம் தேங்குவதை தவிர்க்க 'ரவுண்டானா'
எல் அண்டு டி பைபாஸில் வாகனம் தேங்குவதை தவிர்க்க 'ரவுண்டானா'
ADDED : பிப் 16, 2024 01:58 AM
கோவை;கோவை - திருச்சி ரோட்டில், எல் அண்டு டி பைபாஸ் சந்திப்பில், வாகனங்கள் தேங்குவதை தவிர்க்க, சோதனை முறையில் இருபுறமும் 'ரவுண்டானா' அமைத்து, தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது.
மாவட்ட சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., ஷர்மிளா தலைமை வகித்தார். மாநகராட்சி துணை கமிஷனர் செல்வசுரபி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடந்த ஜன., மாதத்தில், மாவட்டம் முழுவதும் நடந்த சாலை விபத்துகளில், 27 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இரு சக்கர வாகனங்களில் சென்றவர்களில் பலர் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததால், தலைக்காயம் ஏற்பட்டு, உயிரிழந்திருப்பதாக கூறினர். அதைக்கேட்டு அதிர்ந்த டி.ஆர்.ஓ., 'ஹெல்மெட் அணியாமல் செல்வோருக்கு அபராதம் விதியுங்கள்; வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்' என, அறிவுறுத்தினார்.
'சாயிபாபா காலனியில் நெடுஞ்சாலைத்துறையினர் மேம்பாலம் கட்டுவதற்கு முன், மாற்றுப்பாதை ஏற்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, கமிட்டி உறுப்பினர் கதிர்மதியோன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு, 'சாயிபாபா காலனியில் மேம்பாலத்துக்கான டெண்டர் இறுதி செய்யும் பணி இன்னும் முடியாததால், கட்டுமான பணி துவங்க தாமதமாகும். வாகனங்கள் செல்ல சர்வீஸ் ரோடு ஏற்படுத்திய பிறகே, மேம்பால பணியை துவக்க வேண்டும். மேலும், மேட்டுப்பாளையம் நோக்கிச் செல்லும் வாகனங்கள், மேம்பாலம் துவங்குமிடத்துக்கு இடது புறம் திரும்பிச் சென்று, மேட்டுப்பாளையம் ரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே மீண்டும் பிரதான சாலைக்கு வந்தடையும் வகையில் மாற்றுப்பாதை பரிந்துரைக்கப்பட்டுள்ளது'
'அதேபோல், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி வரும் வாகனங்கள் எருக் கம்பெனி அருகே இடதுபுறம் திரும்பிச் செல்லும் வகையில் வழித்தடம் தயார் செய்யப்பட்டுள்ளது.
மேம்பால பணி நடக்கும்போது, ஏதேனும் ஒரு வழித்தடத்தில் வாகனங்களை இயக்கலாம். பீக் ஹவர்ஸ் சமயத்தில் மட்டும் மாற்றுப்பாதையில் அனுமதிக்கலாம்' என, மாநில நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு குழு சார்பாக தெரிவிக்கப்பட்டது.
எல் அண்டு டி ரோட்டில், திருச்சி ரோடு சந்திப்பில், வாகனங்கள் கடந்து செல்ல, 20 நிமிடங்கள் தாமதமாவதால், ரவுண்டானா அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கு, எல் அண்டு டி சாலையில் பாலக்காடு ரோட்டில் சுங்கம் வசூலிக்கும் மையம் அருகிலும், மற்றொருபுறம் பெட்ரோல் பங்க் அருகிலும் சோதனை முறையில் ரவுண்டானா அமைத்து, முயற்சித்து பார்க்கலாம் என ஆலோசனை கூறப்பட்டது. போலீசார் உதவியுடன் இம்முயற்சியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.