/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சின்னதடாகம் அரசு பள்ளிக்கு ரவுண்ட் டேபிள் உதவி
/
சின்னதடாகம் அரசு பள்ளிக்கு ரவுண்ட் டேபிள் உதவி
ADDED : அக் 21, 2024 04:39 AM

பெ.நா.பாளையம், : சின்னதடாகத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு கோவை ஸ்பார்க் ரவுண்ட் டேபிள் சார்பில், 40 நாற்காலிகள், 7 மேஜைகள் வழங்கப்பட்டன.
சின்னதடாகத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 'கல்வியின் வாயிலாக சுதந்திரம்' என்ற முயற்சியின் ஒரு பகுதியாக கோவை ஸ்பார்க் ரவுண்ட் டேபிள், 323 சார்பில்,75 ஆயிரம் ரூபாய் செலவில், 40 நாற்காலிகள் மற்றும் ஏழு மேசைகள் வழங்கப்பட்டன. இதன் வாயிலாக ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு குழந்தைகள், 40 பேர் பயனடைவர்.
நிகழ்ச்சியில், இந்த அமைப்பின் பகுதி தலைவர் ரகுலன் சேகர், பகுதி துணைத்தலைவர் கவுஷிக், திட்ட ஒருங்கிணைப்பாளர் அஷ்பிரீத் சிங் ஆனந்த், திட்ட ஒருங்கிணைப்பாளர் பாவுக், தலைவர் ராகவ் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

