ADDED : செப் 08, 2026 03:00 PM
அ நிறம் | அளவு
கோவை: லட்சுமி மில் பஸ் ஸ்டாப்பில் ஒரு கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், இரண்டு பேர் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 5ம் தேதி ஹைதராபாத்தில் இருந்து பஸ்சில் ஆந்திராவை சேர்ந்த தமம் ரங்கசாமி, 60 கோவை வந்தார். லட்சுமி மில்ஸ் ஸ்டாப்பில் இறங்கியபோது, அவரது பணப்பையை சிலர் பறித்து காரில் தப்பினர்.
ஒரு கோடி ரூபாய் அவர் கையில் இருப்பது தெரிந்துதான், காரில் பின்தொடர்ந்துள்ளனர். இதில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்போது ராஜஸ்தானை சேர்ந்த ரமேஷ்குமார், முகேஷ் குமார் ஆகிய இருவரை ரிமாண்ட் செய்துள்ளனர். மேலும் மூவரிடம் விசாரணை நடப்பதாக கூறப்படுகிறது.
