/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பை கொட்டியவர்களிடம் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூல்
/
குப்பை கொட்டியவர்களிடம் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூல்
குப்பை கொட்டியவர்களிடம் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூல்
குப்பை கொட்டியவர்களிடம் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூல்
ADDED : நவ 24, 2025 06:16 AM
சூலுார்: மயிலம்பட்டி ஊராட்சியில், டெம்போ வில் வந்து குப்பை கொட்டிய நபருக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
சூலுார் ஒன்றிய ஊராட்சிகளில் பொது இடங்களில் குப்பை கொட்டுவோரை கண்டறிய நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, டெம்போவில் வந்த வாலிபர்கள், குப்பையை கொட்டி சென்றனர். இந்த காட்சிகள், அங்கிருந்த கேமராவில் பதிவாகி இருந்தது. இதையடுத்து, வாகனத்தின் பதிவு எண்ணை கொண்டு, குப்பை கொட்டிய நபர்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டனர்.
பெங்களூருவை சேர்ந்த அந்த வாலிபர்களுக்கு, ஊராட்சி செயலாளர் ஷியாம், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். பணத்தை செலுத்திய அவர்களிடம், எந்தவொரு பொது இடத்திலும் குப்பை கொட்ட கூடாது, என, அறிவுறுத்தப்பட்டது.