/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.15.49 லட்சம் மோசடி: கருவூல அலுவலர் கைது
/
ரூ.15.49 லட்சம் மோசடி: கருவூல அலுவலர் கைது
ADDED : ஆக 25, 2025 01:01 AM
கோவை; போலி ஆவணங்களை சமர்ப்பித்து ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கியதாக ரூ.15.49 லட்சம் மோசடி செய்த கருவூல இளநிலை உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்ட ஆத்திகுளம் மகாலட்சுமி நகர் மெயின் ரோட்டைசேர்ந்தவர் முகேஷ்குமார், 23. மதுரை கருவூலத்தில் இருந்து கடந்த ஏப்.மாதம் கோவைக்கு பணியிட மாற்றம் பெற்றார்.
கோவை கருவூல அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் அக்கவுண்டன்ட் விடுப்பில் சென்றதால் அவருக்கு பதில் முகேஷ்குமார் பணியமர்த்தப்பட்டார். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் மண்டல இணை இயக்குனர் ஆண்டு ஆய்வு நடந்தினார்.
அதில் ஓய்வூதியர்முத்துலட்சுமி என்பவர் வாழ்நாள் சான்றிதழ் வழங்காததால், கடந்த மார்ச் 2024 முதல் முத்துலட்சுமிக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது தெரிந்தது. கடந்த ஏப். மாதம் முகேஷ்குமார், மின்னணு வாழ்நாள் சான்றிதழை போலியாக சமர்ப்பித்து, ஏப்.2024 முதல், ஜூன் 2025 வரை ரூ.7.72 லட்சத்தை வழங்கியதுதெரிந்தது. மேலும், முத்துலட்சுமியின் வங்கிக்கணக்கிற்கு பதில், தனக்கு தெரிந்த மதுரை கே.புதுாரை சேர்ந்த முத்துவிக்னேஷ் ரவிக்குமார் என்பவரின்வங்கிக்கணக்கிற்கு முகேஷ்குமார் அனுப்பியது தெரிந்தது.
அவரிடமிருந்து முகேஷ்குமார், மோசடி பணத்தை தனது வங்கிக்கணக்கிற்கு மாற்றியுள்ளார். இதேபோல், மேலும் நான்கு ஓய்வூதியதாரர்கள் பெயரில் போலி ஆவணம் சமர்ப்பித்து மொத்தம் ரூ.15.49 லட்சம் மோசடி செய்தது தெரிந்தது.
இதுகுறித்து மாவட்ட கருவூல அலுவலர் குமரேசன் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார்அளித்தார். போலீசார் முகேஷ்குமாரை கைது செய்தனர்.