தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/டூத்பேஸ்ட்டுக்கு ரூ.2 அதிகம் வசூல்ரூ.10,000 இழப்பீடு வழங்க உத்தரவு

டூத்பேஸ்ட்டுக்கு ரூ.2 அதிகம் வசூல்ரூ.10,000 இழப்பீடு வழங்க உத்தரவு

டூத்பேஸ்ட்டுக்கு ரூ.2 அதிகம் வசூல்ரூ.10,000 இழப்பீடு வழங்க உத்தரவு


UPDATED : அக் 24, 2026 06:50 PM

ADDED : அக் 24, 2026 06:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 06:50 PM ADDED : அக் 24, 2026 06:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: மருதமலை அடிவாரம், அண்ணாநகரை சேர்ந்தவர் அஜித். அப்பகுதியிலுள்ள ஆர்த்தி சூப்பர் மார்க்கெட்டில், 2026, மார்ச் 3 ல் டூத் பேஸ்ட் வாங்கினார். அதில், வரி உள்பட சில்லறை விற்பனை விலை, ரூ.18(எம்.ஆர்.பி)என, அச்சிடப்பட்டு இருந்தது. ஆனால், ரூ.20 என பில் போட்டனர்.

கூடுதலாக வாங்கிய தொகையை திருப்பி கேட்ட போது தர மறுத்தனர். அதிக பட்ச சில்லறை விலைக்கு மேல், பொருட்களை விற்பது நியாயமற்ற வர்த்தக நடைமுறை என, அவர் சுட்டி காட்டியும் உரிய பதில் அளிக்கவில்லை.

நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். ஆணைய தலைவர் தங்கவேல், உறுப்பினர் மாரிமுத்து விசாரித்தனர். ‘‘கூடுதலாக வசூலித்த 2 ரூபாயை திருப்பி கொடுக்க வேண்டும். மனஉளைச்சலுக்கு இழப்பீடாக, ரூ.5,000, வழக்கு செலவு, ரூ.5,000 வழங்க வேண்டும்,’’ என உத்தரவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us