/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகளிர் குழுவிற்கு ரூ.2.5 கோடி கடன்
/
மகளிர் குழுவிற்கு ரூ.2.5 கோடி கடன்
ADDED : ஜூன் 12, 2025 10:12 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் இந்தியன் வங்கி சார்பில், 20 மகளிர் குழுக்களுக்கு, 2.5 கோடி ரூபாய் கடன் தொகை வழங்கப்பட்டது. இதனால், 180 மகளிர் பயனடைந்தனர்.
மேட்டுப்பாளையம் நகரில் ஏராளமான மகளிர் குழுவினர் செயல்படுகின்றனர். இவர்கள் அரசு வங்கிகளில் கடன் தொகை பெற்று, சிறு தொழில் செய்து வருகின்றனர். முறையாக கடனை திருப்பி செலுத்தும் குழுக்களுக்கு, அடுத்தடுத்து கடன் தொகை வழங்கப்படுகிறது.
மேட்டுப்பாளையம் இந்தியன் வங்கி சார்பில், நேற்று மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, கடன் வழங்கும் நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடந்தது. இதில் 20 குழுக்களைச் சேர்ந்த, 180 மகளிர் பங்கேற்றனர்.
கூட்டு மகளிர் குழுவிற்கு தலா, 50,000 ஆயிரம் ரூபாய் முதல், தொழில் செய்யும் குழுக்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டது. மொத்தமாகவும், 2.5 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது.