ADDED : ஆக 28, 2026 04:21 PM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில், ஊட்டி உருளைக்கிழங்குகள், ரூ.3,000த்திற்கும் மேல் உயர்ந்து விற்பனை ஆகி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சில மாதங்களாக, ஊட்டி உருளைக்கிழங்குகளுக்கு, 45 எடை கொண்ட ஒரு மூட்டை ரூ.2,200 முதல் ரூ.2,600 வரை விற்பனை ஆகி வந்தது. கடந்த 8ம் தேதி ரூ.3,000ம் தொட்டது; பின் மீண்டும் விலை குறைந்தது.
சுமார் 20 நாட்கள் கழித்து, நேற்று முன்தினம், மேட்டுப்பாளையத்தில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை அதிகபட்சமாக ரூ.3,020க்கு விற்பனையானது;300 மூட்டைகள் லோடு வந்தன.------
