/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்குவரத்து போலீஸ் விதித்த ரூ.6.57 கோடி அபராதம் பாக்கி
/
போக்குவரத்து போலீஸ் விதித்த ரூ.6.57 கோடி அபராதம் பாக்கி
போக்குவரத்து போலீஸ் விதித்த ரூ.6.57 கோடி அபராதம் பாக்கி
போக்குவரத்து போலீஸ் விதித்த ரூ.6.57 கோடி அபராதம் பாக்கி
ADDED : ஆக 20, 2025 11:28 PM
கோவை:போக்குவரத்து விதி மீறலை கண்டறிந்து, போலீசார் விதித்த அபராதத் தொகையில், இன்னும் 6.57 கோடி ரூபாய் வசூலிக்கப்படாமல் உள்ளது. இத்தொகையை வசூலிப்பதற்கான முயற்சியில், போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கோவை நகர்ப்பகுதியில் போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிய, சிக்னல்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கேமராக்களின் படங்களை ஆதாரமாகக் கொண்டு, அபராதம் விதிக்கப்படுகிறது.
போலீசாரும் மொபைல் போனில் படம் எடுத்து, செயலியில் பதிவேற்றம் செய்கின்றனர். அபராதத் தொகை விபரம், சம்பந்தப்பட்ட வாகன ஓட்டியின் மொபைல் போனுக்கு செல்லும்.
கோவை மாநகர போக்குவரத்து போலீசாரால், ஏழு மாதங்களில், 75,908 வழக்குகள் பதிவு செய்து, 7.06 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதில், 5,096 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
இதுவரை, 49.86 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இன்னும், 6.57 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்படாமல் உள்ளது. இத்தொகையை வசூலிக்க, போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.