/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கடன் பெற்று தருவதாக ரூ.67 லட்சம் மோசடி
/
கடன் பெற்று தருவதாக ரூ.67 லட்சம் மோசடி
ADDED : அக் 19, 2025 03:25 AM
கோவை: கோவை மாவட்டம், நேரு நகரை சேர்ந்தவர் சிவசாமி, 57; கான்கிரீட் ரெடிமிக்ஸ் நிறுவனம் நடத்துகிறார். நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்காக, அவர், 25 கோடி ரூபாய் கடன் பெற முயற்சித்தார். அவருக்கு தெரிந்த ஹரி என்பவர் வாயிலாக, சேலம், எடப்பாடியை சேர்ந்த செந்தில்வாசன் என்பவர் அறிமுகம் ஆனார்.
செந்தில்வாசன், தனக்கு தெரிந்த நிதி நிறுவன உரிமையாளர்கள் மூலம் கடன் பெறலாம் எனக்கூறி, கண்ணன், அன்புசெல்வன், கார்த்திகேயன் ஆகியோரை சிவசாமிக்கு அறிமுகம் செய்தார். அவர்கள், 25 கோடி கடன் பெற, 67 லட்சம் ரூபாய் முன்பணம் கேட்டனர். 12.50 கோடிக்கான இரு டி.டி.,க்களை காட்டினர்.
அவர்கள் கேட்டபடி, 67 லட்சத்தை சிவசாமி அனுப்பினார். ஆனால், கூறியபடி பணம் தரவில்லை. அவர் அனுப்பிய, 67 லட்சம், அந்தோணி என்பவரின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டது தெரிந்தது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சிவசாமி, போலீசாரிடம் புகார் அளித்தார்.
செந்தில்வாசன், கண்ணன், அன்புசெல்வம், கார்த்திகேயன், அந்தோணி ஆகியோர் மீது, பீளமேடு போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.