/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.1.85 லட்சம் இழப்பீட்டுக்கு இழுத்தடிப்பு; அரசு பஸ் ஜப்தி
/
ரூ.1.85 லட்சம் இழப்பீட்டுக்கு இழுத்தடிப்பு; அரசு பஸ் ஜப்தி
ரூ.1.85 லட்சம் இழப்பீட்டுக்கு இழுத்தடிப்பு; அரசு பஸ் ஜப்தி
ரூ.1.85 லட்சம் இழப்பீட்டுக்கு இழுத்தடிப்பு; அரசு பஸ் ஜப்தி
ADDED : மார் 05, 2024 01:08 AM

கோவை;விபத்தில் இறந்த முதியவர் குடும்பத்துக்கு, 1.85 ரூபாய் இழப்பீடு வழங்காமல், 11 ஆண்டாக இழுத்தடிப்பு செய்ததால், அரசு பஸ் ஜப்திக்குள்ளானது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், திம்பம் பகுதியை சேர்ந்தவர் துண்டையா,60; கூலித்தொழிலாளி. 2007, ஜன., 9ல், அங்குள்ள வனத்துறை சோதனை சாவடி அருகே, ரோட்டோரத்தில் நின்றபோது, அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதியதில், இரண்டு கால்கள் சிதைந்தன.
கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இழப்பீடு வழங்க கோரி, அவரது குடும்பத்தினர், கோவை ஐந்தாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர்.
விசாரித்த நீதிமன்றம், ரூ.1.85 லட்சம் இழப்பீடு வழங்க, 2013ல் உத்தரவிட்டது. 11 ஆண்டுகளுக்கு மேலாகியும் இழப்பீடு தராமல், அரசு போக்குவரத்து கழகம் இழுத்தடிப்பு செய்ததால், வட்டியுடன் சேர்த்து, நான்கு லட்சம் ரூபாயாக அதிகரித்தது.
அதே கோர்ட்டில், நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிடப்பட்டது.
அதன்படி, கோவை - சத்தி செல்லும் அரசு பஸ், காந்திபுரத்தில் நேற்று ஜப்தி செய்யப்பட்டு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.

