/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீடு மறு கட்டுமான திட்டத்தில் விதியை தளர்த்த வேண்டும்; சிறப்பு கிராம சபையில் மக்கள் கோரிக்கை

ADDED : ஜூன் 06, 2025 05:47 AM

அன்னுார்; வீடுகள் பழுது பார்க்கும் திட்ட சிறப்பு கிராம சபை கூட்டம் 21 ஊராட்சிகளில் நேற்று நடந்தது. அரசு விதியை தளர்த்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
முதலமைச்சர் வீடுகள் மறு கட்டுமான திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தில் நடப்பு நிதியாண்டில், 25 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு, 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்ம் குறித்து தெரிவிக்க சிறப்பு கிராம சபை கூட்டம் அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில் 21 ஊராட்சிகளிலும் நேற்று நடந்தது.
ஒட்டர்பாளையம் ஊராட்சியில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி பேசுகையில், 2001 மார்ச் 31 ம் தேதிக்கு முன்பாக அரசு திட்டத்தில் கட்டப்பட்ட வீட்டின் உரிமையாளர்கள் தங்கள் வீடு பழுதடைந்திருந்தால் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். 210 சதுர அடியில் வீடு கட்ட இரண்டு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பட்டா, ஆதார், ரேஷன் கார்டு, வங்கி பாஸ் புத்தகம், இரண்டு போட்டோ ஆகியவற்றுடன் ஊராட்சி அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம், என்றார்.
அன்னுார் ஒன்றியத்தில் 21 ஊராட்சிகளிலும் நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டங்களில், பொதுமக்கள் பேசுகையில், 'கட்டி இருபது ஆண்டுகள் ஆன வீடுகளும் மோசமான நிலையில் உள்ளன. எனவே 20 ஆண்டுகள் ஆன வீட்டின் உரிமையாளர்களும் விண்ணப்பிக்கலாம் என விதியை தளர்த்த வேண்டும்,' என்றனர்.