/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ரன்' மழை பொழிந்த அண்ணா பல்கலை; 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
/
'ரன்' மழை பொழிந்த அண்ணா பல்கலை; 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
'ரன்' மழை பொழிந்த அண்ணா பல்கலை; 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
'ரன்' மழை பொழிந்த அண்ணா பல்கலை; 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
ADDED : செப் 23, 2024 11:24 PM

கோவை : அண்ணா பல்கலை மண்டல மையம் மற்றும் இன்போ டெக் கல்லுாரிக்கு இடையேயான போட்டியில், 184 ரன்களை குவித்து அண்ணா பல்கலை அணி, அபார வெற்றி பெற்றது.
அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் கடந்த, 20ம் தேதி துவங்கி அக்., 25ம் தேதி வரை நடக்கிறது. அண்ணா பல்கலை மண்டல மைய மைதானத்தில் கடந்த, 22ம் தேதி முதல், 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன.
நேற்று முன்தினம் துவங்கிய கிரிக்கெட் போட்டியை, அரசு தொழில்நுட்ப கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் விமலா துவக்கிவைத்தார். முதல் போட்டி, கிரைஸ்ட் தி கிங் கல்லுாரிக்கும், அரசு தொழில்நுட்ப கல்லுாரி(ஜி.சி.டி.,) அணிக்கும், இடையே நடந்தது.
முதலில் பேட்டிங் செய்த ஜி.சி.டி., கல்லுாரி அணி, 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட்களை இழந்து, 157 ரன்கள் எடுத்தது. 158 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய கிரைஸ்ட் தி கிங் அணியினர், 12 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 48 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவினர்.
இரண்டாவது ஆட்டத்தில், சி.எஸ்.ஐ., அணியும், பி.பி.ஜி., ஐ.டி., அணியும் மோதின. முதல் பேட்டிங் செய்த பி.பி.ஜி., ஐ.டி., அணி, 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 141 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய சி.எஸ்.ஐ., அணி, 11.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 68 ரன்கள் மட்டுமே எடுத்தது.
மூன்றாவது ஆட்டத்தில், பி.பி.ஜி.,(பி.எஸ்.,) அணியும், கே.சி.டி., அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த கே.சி.டி., அணி, 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட்களை இழந்து, 312 ரன்களை குவித்தது. தொடர்ந்து விளையாடிய பி.பி.ஜி.,(பி.எஸ்.,) அணி, 16 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 23 ரன்கள் மட்டுமே எடுத்தது.
நேற்று காலை, அண்ணா பல்கலை மண்டல மையம் மற்றும் இன்போ டெக் கல்லுாரிக்கு இடையேயான போட்டி நடந்தது. முதலில் பேட்டிங் செய்த அண்ணா பல்கலை அணி, 20 ஓவர் முடிவில், 10 விக்கெட்களை இழந்து, 184 ரன்கள் எடுத்திருந்தது.
தொடர்ந்து விளையாடிய இன்போ கல்லுாரி அணி, 18.4 ஓவர்களில், 10 விக்கெட்களையும் இழந்து, 71 ரன்களை எடுத்து தோல்வியடைந்தது. மொத்தம், 15 அணிகள் பதிவு செய்திருந்த நிலையில், 'நாக் அவுட்' போட்டிகளையடுத்து, இன்று காலிறுதி போட்டிகள் துவங்குகின்றன.