/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊரக வளர்ச்சி ஊழியர் ஸ்டிரைக்கால் முக்கியமான அரசுப் பணிகள் பாதிப்பு
/
ஊரக வளர்ச்சி ஊழியர் ஸ்டிரைக்கால் முக்கியமான அரசுப் பணிகள் பாதிப்பு
ஊரக வளர்ச்சி ஊழியர் ஸ்டிரைக்கால் முக்கியமான அரசுப் பணிகள் பாதிப்பு
ஊரக வளர்ச்சி ஊழியர் ஸ்டிரைக்கால் முக்கியமான அரசுப் பணிகள் பாதிப்பு
ADDED : பிப் 12, 2026 05:15 AM

கோவை: ஊரக வளர்ச்சித் துறையில் ஊழியர்களிடம் வேலை வாங்கும் அளவிற்கு, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு ஆர்வம் காட்டவில்லை என அத்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மூன்று ஆண்டுகளாக காலியாக உள்ள ஓட்டுநர், எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; பதவி உயர்வு வழங்க வேண்டும்; கணினி உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 18 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடுகின்றனர்.
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால், தாலுகா அலுவலகங்களில் அன்றாட பணிகள் முற்றிலும் முடங்கின. சான்றிதழ்கள் மற்றும் சேவைகளுக்காக அலுவலகம் வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்ப நேரிட்டது.
சங்க நிர்வாகிகள் கூறுகையில், கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு வாக்குறுதி அளித்தாலும், அதற்கான அரசாணையை வெளியிடுவதில் மெத்தனப்போக்கு நிலவுகிறது. தமிழகம் வளர்ச்சி அடைந்த மாநிலம் என முதல்வர் கூறுகிறார். ஆனால், நிதி இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். நிதி தேவைப்படாத நிர்வாக ரீதியான கோரிக்கைகளை கூட நிறைவேற்ற அரசு தயங்குவது ஏன்? என்று கேட்டார்.

