/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முறையாக புதுப்பிக்காத கிராமப்பகுதி சாலை கள்
/
முறையாக புதுப்பிக்காத கிராமப்பகுதி சாலை கள்
ADDED : ஏப் 14, 2025 04:28 AM
பொள்ளாச்சி ;பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு செல்லும் பெரும்பாலான சாலைகள், குண்டும் குழியுமாக மாறி வருகிறது.
பொள்ளாச்சி தாலுகாவில் வடக்கு ஒன்றியத்தில் 39 ஊராட்சிகளும், தெற்கு ஒன்றியத்தில் 26 ஊராட்சிகளும் உள்ளன. பல ஊராட்சிகளில் சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டும் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது.
அதனால், பல கிராமங்களுக்கான சாலைகள், ஜல்லி கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக மழைநீர் தேங்கி சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. சாலையில் பயணிக்கும் கிராம மக்களும், வயதானவர்கள், கர்ப்பிணிகள், பள்ளி மாணவர்கள் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.
குண்டும் குழியுமான சாலையில் பயணிக்கும் வாகனங்கள் பழுதடைவதுடன், இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துகளையும் எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, சீனிவாசபுரம் - குஞ்சிபாளையம், வஞ்சியாபுரம் - நாட்டுக்கல்பாளையம், மாக்கினாம்பட்டி - சூளேஸ்வரன்பட்டி இடையிலான சாலைகள், தேவம்பாடி வலசு, உள்ளிட்ட பல பகுதிகளில், கிராமச் சாலைகள் மோசமாக மாறியுள்ளது.
ஒன்றிய அதிகாரிகள், சேதமடைந்த சாலையை, புதுப்பிக்க வேண்டும் என, கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் கூறுகையில், 'பல பகுதிகளில், கிராமங்களை இணைக்கும் சாலைகள், மோசமாகவே காணப்படுகிறது. சாலையை அடிப்படையாகக் கொண்டுதான், கிராமப்புறங்களின் வளர்ச்சி மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதனால், கிராம சாலைகளை சீரமைக்க, அதிகாரிகள் முன் வரவேண்டும்,' என்றனர்.

